Skip to main content

Posts

Showing posts from July, 2009

"உன்னிடம் மட்டும்"

ஏ இளைஜனே ! பைத்தியக்காரனிடம் கூட தத்ரூபமாக சிலை வடிக்கும் அழகைக் கண்டேன். கால் ஊனமுற்றவனிடம் கூட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் அளவுக்கு தன்னம்பிக்கையைக் கண்டேன். கண் இல்லாதவனிடம் கூட இயற்கையை அழகாக வர்ணித்து கவி எழுதும் ஆற்றலைக் கண்டேன். கை, கால் அற்றவனிடம் கூட தூரிகையை வாயினில் ஏந்தி ஓவியம் தீட்டும் அழகைக் கண்டேன். ஏ இளைஜனே ! உன்னிடம் மட்டும் தான் வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும் துணை போகும் ஈனச் செயலைக் காண்கிறேன்...!

"இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?"

ஏ சுனாமியே! நீ செத்தொழிய மாட்டாயோ ? ஏ மரணமே! உனக்கு மரணம் வாராதோ? ஏ சுனாமியே! பச்சிளம் குழந்தை என்று பாராமல் பலி கொண்டாயே அந்த மொட்டுகளிடம் மன்னிப்பு கேள் ... ஏ மரணமே! சதியாலோசனை செய்து சுனாமிக்குத் துணை போனையே என் உயிர் மக்களிடம் மண்டியிடு... ஏ இயற்கையே ! உலகத்தில் பூத்து உனக்கு அழகு சேர்த்த மனித இனங்களை உன் கொபக்கனளுக்கு இறையாக்குகிறாயே... ஏ இயற்கையே உன்னையும் அழித்துக் கொண்டு மனிதப் பூக்களையும் அழிக்கும் நீ இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?!!!

''வைரங்கள்"

இளம் சிறார்களே! புத்தகப் பையை சுமந்து இந்தியாவின் எதிர்காலத்தைத் தாங்க வேண்டிய உன் கரங்கள் இன்று தீப்பெட்டி தொழிற்ச் சாலையில் தீக்குச்சியை செய்து கொண்டு இருக்கிறது. அன்னை ஊற்றும் அரை வயிற்றுக் கஞ்சும் தினம் கிடைக்க வேண்டும் என்று அன்னையோடு போராடும் இளம் தளிர்களே! நீங்களெல்லாம் "ஜப்பான் நாடு'' தத்தெடுக்க வேண்டிய தங்கங்கள். குடும்பப் பற்றுக் காரணமாக கூலிக்கு போராடும் இளம் சிறார்களே ! நீங்களெல்லாம் "சீனா" வாரி அனைத்துக் கொள்ள வேண்டிய வைரங்கள்.. இளம் மொட்டுகளே! இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் என்பதால் கல்வியை போதிக்க அழைக்கிறோம் . எழுந்து வாருங்கள்.................

"பெண்மை"

அவன் காலில் முள். முள்ளில் இரத்தம். கதறியது முள். கற்பிழந்தேனே என்று!!! கறை பட்டேனே என்று!!!

"அடிமை"

எங்களின் உலகத்தில் சுதந்திரமாக சிரிப் பதற்குக் கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆம் "பெண்ணடிமை " என்னும் உலகத்தில்......

"இன்னொரு ஜென்மம்"

கடவுள் என்னிடம் வந்து ''என்ன வரம் வேண்டும் கேள் என்றால்" எனக்கு "இன்னொரு ஜென்மம்" வேண்டும் என்று கேட்பேன். வாழ்க்கை மீது கொண்ட பற்றினால் அல்ல. உன் அன்பின் மீது கொண்ட பற்றினால்...

''பொய்யென்று நினைத்தேன்"

என்னவளே! மேகம் பொய்யென்று நினைத்தேனடி. அது மழைப் பொழியும் வரை... சூரியன் பொய்யென்று நினைத்தேனடி. அது சுட்டெரிக்கும் வரை... நிலவு பொய்யென்று நினைத்தேனடி. அது குளிரும் வரை... வானவில் பொய்யென்று நினைத்தேனடி. அதன் வண்ணங்களை காணும் வரை... பாசம் பொய்யென்று நினைத்தேனடி. என் தாய் அன்பில் சிக்கும் வரை... இதயம் பொய்யென்று நினைத்தேனடி. அது துடிக்கும் வரை... மரணம் பொய்யென்று நினைத்தேனடி. என் தந்தையின் மறைவை காணும் வரை... இரவு பொய்யென்று நினைத்தேனடி. அது விடியும் வரை... மலர்கள் பொய்யென்று நினைத்தேனடி. அதன் வாசத்தை அனுபவிக்கும் வரை... துன்பம் பொய்யென்று நினைத்தேனடி. நான் உன்னைக் காணும் வரை.... தேனும் பொய்யென்று நினைத்தேனடி. அதன் ருசியினை அறியும் வரை... ஆனால் காதல் பொய்யென்று நினைக்க வில்லை. நீ என்னை ஏமாற்றும் வரை.........!!!

"மனிதன்'

என்னவளே! ஒரு ஷேக் ஸ்ப்பியர் வேண்டாம். ஒரு ரவிவர்மா வேண்டாம். ஒரு அப்துல்கலாம் வேண்டாம். ஒரு ரபிந்தரனாத் தாகூர் வேண்டாம். ஒரு சுபாஷ் சந்திரபோஸ் வேண்டாம். ஒரு மகாத்மா காந்தி கூட வேண்டாம். அட்லீஸ்ட் உன்னை பார்க்காமல் இருந்திருந்தால் ஒரு மனிதனாவது ஆகியிருப்பேன்...........!

"காதல் கவிதை"

"என்னவளே"! "உன்னை நினைத்து" என் "துள்ளாத மனமும் துள்ளுகிறது '' ''அன்பே அன்பே '' "உன்னாலே" என் மனம் "அலை பாயுதே" "நீ வருவாய் என " "மன்மதன்" நான் "ப்ரியமுடன்" காத்துக் கொண்டிருக்கிறேன். "சிநேகிதியே" "உன்னுடன்" "என் மன வானில்" "கில்லி" ஆடுகிறேன். "தேவதையே" என் வீட்டு "பூவெல்லாம் கேட்டுப் பார்" "பூவெல்லாம் உன் வாசம் " தான். "வானவில்லே" "காதலன்" நான் உன் மீது "காதல் கொண்டேன் '' "பிரியமானவளே" உனக்காக என் "காதல் தேசத்தில்" "காதல் கோட்டை" கட்டி இருக்கிறேன். என் "புன்னகை தேசமே" "நினைத்தேன் வந்தாய்" என் "இதயத்தில்". "பிரியமான தோழியே" என் " நெஞ்சினிலே" "அட்டகாசம் '' செய்கிறாயடி..... "புன்னகைப் பூவே'' உன்னை விட்டு ''பிரியாத வரம் வேண்டும்' "என் சுவாசக் காற்றே" "விரும

"அவளின் நிழல்"

கிடக்கும் கல் கூட சிலையாக துடிக்குதடி மோகனமே ! உன்னை நேசிக்க ...... நிற்கும் சிலை கூட உயிர் பெற துடிக்குதடி மெல்லினமே ! உன்னை காதலிக்க..... அன்பே ! நான் கூட "ஆணாக" துடிக்கிறேன் உன்னை காதலிக்க ...........!

"என் உயிர் ஈடாகுமானால்"!

ஏ கடலே ! உனக்கு கருணை இல்லையா ? உன்னை பார்த்து ஆனந்த பட்ட என் மக்களுக்கு நீ கொடுத்த பரிசு இதுதானா? எத்தனை எத்தனை பிஞ்சு குழந்தைகளை நீ இரையாக்கிக் கொண்டாய் ! எத்தனை எத்தனை முதியவர்களை உன்னுள் இழுத்துச் சென்றாய் ! பெற்றத் தாயின் கையில் இருந்த பிஞ்சு நெஞ்சை தட்டி சென்றாயே .... ஏ கடலே! நீயும் பெண் தானே ? இந்தியா வல்லரசாகி விடும் என்று கனவு கண்டு கொண்டு இருந்தோம் ! அந்த கனவை நனவாக்க நினைத்த எங்கள் இளம் சிறார் களை உன் கோரப் பசிக்கு உணவாக்கி விட்டாயே ! இன்னும் என் மக்க ளால் ஒரு குஜராத் பூகம்பத்தை மறக்க முடிய வில்லை ....... ஒரு கும்பகோணம் தீ விபத்தைச் ஜீரணிக்க முடிய வில்லை...... ஒரு அதிர்ச்சியை மறக்க நினைப் பதற்குள் இன்னொரு பேர் அதிர்ச்சியை கொடுத்து விட்டாயே ! ஏ சுனாமியே ! ஒரு அநாதை இல்லத்தை மூட நினைப் பதற்குள் நூறு அநாதை இல்லத்தை திறக்க வைத்து விட்டாயே ........ அடுத்தவர்களுக்கு உணவிட்டு மகிழ்ந்த என் மக்களுக்கு அடுத்த வேலை சோற்றுக்கு கையேந்தும் நிலையை ஏற்படுத்தி விட்டாயே ! ஏ கடலே ! நீ ஆர்பரித்து வரும்போது உன் அழகை இரசிக்கத் தானே என் மக்கள் காத்து இருந்தனர் ..... அவர்கள் ஆனந்த

மனிதனாக வாழ ஆசை

அன்பே ! உன் காதலுக்காக பல வருடம் உன் பின்னால் அலைந்தேன்!...... உலகம் எனக்கு பைத்தியக்காரன் என்ற பட்டத்தைக் கொடுத்து......... ஏ காதலே!..... என் இதயத்தை விட்டு விலகி போ ! சிறிது காலம் எனது உறவுகளுக்காக மனிதனாக வாழ ஆசை படுகிறேன் !..

"விபச்சாரி"

ஏ பெண்ணே ! பார்க்கும் ஆடவனை எல்லாம் இவன் நமக்கு கணவனாக கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நினைக் கிறாயே !...... தினம் தினம் மனதால் கெட்டுப் போகும் உன்னை விட "விபச்சாரி" மேல் அல்லவா?!!!................

ஒரு முறை உயிர் பெற்று வா!

ஓ மகாத்மாவே ! ஒரு முறை உயிர் பெற்று வா..... அந்நியரிடம் சுதந்திரம் வாங்க அல்ல!! காதல் தோல்வியால் மாண்டு போகும் இன்றைய இளைய சமுதாயத்தை காப்பாற்ற !!...............

வானவில்

சந்தோஷம் என்பது என் வாழ்க்கையில் மட்டும் ஏன் எப்போதாவது வந்து செல்லும் வான வில்லாக கூட இருக்க மாட்டேன் என்கிறது...!!!