Tuesday, November 6, 2012

வேண்டுமொரு தாய்


களத்து மேட்டில் நெல் அடித்து
குளத்து  மேட்டில் துணி துவைத்து
கட்டு சோறு கட்டி என்னை
கல்வி கற்க அனுப்பினாய் அம்மா....

காடு மேடு சுற்றி வந்து
காவல் நீ எனைக் காத்து
கழனி சென்று விறகு வெட்டி
கால் வயிறு காஞ்சி ஊற்றினாய் அம்மா.....

கட்டியவன் காப்பாற்ற வழியற்று
கைவிட்டான் உன்னை
கந்து வட்டி கடன் வாங்கி
கலெக்டர் எனை ஆக்கினாய்  அம்மா...

காடு சுற்றி களைத்தவளை
முதுகு தேய உழைத்தவளை
ஊர் போற்ற வாழ வைக்க
பிள்ளை நான் எண்ணினேன் அம்மா...

கடைசி ஒரு ஆசை என்று
கல்யாணம் பண்ணி வைத்தாய்
கட்டிய தாலி மஞ்சள் காயுமுன்னே
கட்டியவள் தள்ளி வைக்க சொன்னால் உன்னை...

மனையறம் தான் முக்கியமென்று
மனைவி வழி போகச் சொன்னாய்
கலெக்டரே ஆனாலும்
கணவன் என்ற முறையில் வாழச் சொன்னாய்....

பெற்றவளை பிள்ளை பாசத்திற்கு
ஏங்க  வைத்து பிள்ளை நான்
பிரிந்து சென்றேன்
கட்டியவள் வழி நடத்த....

கஞ்சி ஊற்ற நாதியற்று
கல்லறையில் உறங்கிப் போனாய்
கதியற்று போனேன் அம்மா
மதியற்று போனேன்.....

உனை இருக்கும் போது விட்டு விட்டு
கல்லறை போன பின்னே
காலம் கடந்து
புலம்புகிறேன் அம்மா.....

வேண்டுமொரு தாயென்று
காசு கொடுத்து கேட்டாலும்
கண்ணீர்  சிந்தி புலம்பினாலும்
கிடைப்பவளா நீ அம்மா?.....

பத்து தாய்களை தத்து எடுத்து
பரிகாரம் தேடினாலும்
பெற்றவளை தவிக்க விட்ட
பாவம் தான் போகுமா அம்மா ?........

நித்தம் ஒரு முத்தம் கொடுத்து
நித்திரை மறந்தவளை
சத்தமின்றி சாகடித்தேன்
சாத்தான் வழி வந்தவன் நான்......

கட்டிளம் காளைகளை
கண்ணீருடன் வேண்டுகிறேன்
முலைப்பால் ஊட்டியவளுக்கு
கடைசிப் பால் ஊற்றும் வரை....

கல்யாண போதையிலே
காசு பார்க்கும் மமதையிலே
தவிக்க நீ விட்டாய் என்றால்
தண்டிக்கப் படுவாய் அப்பா
தண்டிக்கப்  படுவாய்......

தண்டனை கொடுக்கப் போவது
பெற்றவளும் அல்ல
பெற்றவளை தவிக்க விட்ட   நானுமல்ல
உன் வழி பார்த்து வளரும்
உன் பிள்ளையால்
தண்டிக்கப் படுவாய் அப்பா
தண்டிக்கப்  படுவாய்......


Sunday, November 4, 2012

கருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்


அம்மா!
என் பிறப்பின் நேரம் நெருங்கி விட்டது.
அதற்கு முன் என் கடிதத்திற்கு பதில் அளித்து விடு...
கருவில் என்னை நீ சுமந்து கொண்டு இருக்கும் போதே
அண்ணல் காந்தியைப் பற்றிப் படித்தாய்.
மாமா நேருவைப் பற்றி படித்தாய்.
அப்துல்கலாமை பற்றி படித்தாய்.
நேதாஜிவிவேகானந்தன்பகத் சிங்
பற்றியெல்லாம் படித்தாய்.
கல்பனா சாவ்லாசுனிதா வில்லியம்ஸ்
பற்றியும் படித்தாய்.
ராமாயணம்இதிகாசம்பகவத் கீதை
பற்றிக்கூட படித்தாய்.
தவறு செய்யும் மனிதனுக்கு என்ன
தண்டனை கிடைக்கும் என்பதற்க்கான
நீதிக் கதைகளையும் படித்தாய்.
பாரத பூமியைப் பற்றிப் படித்தாய்.
பக்கத்து நாடுகளைப் பற்றியும் படித்தாய்.
இந்தியக் கலாச்சாரம்குடும்பம்பாரம்பரியம்
 பற்றிகூட படித்தாய்.
யுத்தம்வரலாறுஅறிவியல்
பற்றியும் படித்தாய்.
இந்திய அரசியலையும் படித்தாய்.
எனக்காக A,B,C,D,  வையும்
சேர்த்து படித்தாய்.
நல்லவர்களைப் பற்றிப் படித்தாய்.
போராளிகளைப் பற்றிப் படித்தாய்.
ஆனால் அம்மா,
எந்தவித பாவமும் செய்யாமல் 
போராட்டத்துடனே பிறந்து
அனாதைகளாக்கப்பட்ட
என் போன்ற மழலைகளின் நிலைப்பற்றி
ஏனம்மா படிக்கவில்லை.....?
பிறந்த தேதி தெரியாவிட்டாலும்
பரவாயில்லை....
உயிர் கொடுத்த தகப்பன் பெயர்
தெரியாவிட்டாலும் பரவாயில்லை....
ஆனால்
பெற்றவளே யார் என்று
தெரியாமல் இருப்பது
எவ்வளவுப் பெரிய அவமானம் என்பதை
நீ அறிவாயா?
தன் பிறந்த நாள் தெரியாத அனாதைக்
குழந்தைகள்அடுத்தவனுக்கு என்று
பிறந்த நாள் வரும் என்று ஏங்குகின்றனர்
ஒரு வேலை சோறிடுவார்கள் என்பதற்காக....
அனாதைகளுக்கும் அம்மாஆசைபாசம்ஏக்கம்,
அன்புபண்டிகை இவையெல்லாம்
உண்டு தானே?
என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்
இவையெல்லாம் நிராகரிக்கப்படுவதற்கு.......?
அன்னையே!
அனாதைகளைப் பற்றி ஏன்  படிக்கவில்லை
என்று உன் மீது குற்றம் சுமத்துவதற்காக
இவை எல்லாம் சொல்லவில்லை.
எதிர் காலத்தில் என் நிலைமையும்
இப்படி ஆகி விடக் கூடாது என்பதற்காக
சொல்கிறேன்........
அன்னையே!
கேட்பதற்காக என்னை மனித்து விடு..
என் பிறப்பு அங்கீகாரம் வாய்ந்தது என்றால்
என் பிறப்பின் பின்
அப்பன்ஆத்தாள் பெயர் தெரியாத
அவமானம் நேராது என்றால்
தாயே எனை பெற்று எடு......
இல்லையேல் கருவிலேயே
கருணைக் கொலை செய்து விடு.......      
Friday, August 3, 2012

யுத்தபூமியா? ரத்தபூமியா?

அனாதைகளாய் திரிகின்றோம்
ஆதரவு கரம் நீட்டுவோர் இல்லை
இலங்கை என்ன யுத்த பூமியா? இல்லை ரத்த பூமியா?
ஈன்ற அன்னை மாண்டு போனது தெரியாமல்
உயிர் பால் தேடுகின்றன பச்சிளம் பிஞ்சுகள் 
ஊருக்கு உபதேசம் செய்யும்
எந்தன் தாய் திருநாடுதமிழ்
ஏழைகளின் உயிர் காக்க மறந்தது ஏனோ?
ஐயம்! ஐயம்! ஐயம்! என்றே விடிகிறது
ஒவ்வொரு விடியலும் .
ஓலம்! எங்கு நோக்கினும் மரண ஓலங்கள்  - இலங்கை
ஒளயத்தில்  மனித உயிர்கள் விலையின்றி   விற்கப்படுகின்றன.
அக்தோ  பரிதாபம் .............

Tuesday, November 2, 2010

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"


அற்புதம் என்று நடக்குமென்று

ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா!
இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள்
ஈவதற்கு மனித மனம் உண்டோ?
உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம்
ஊர் வாழ துணை நிற்குமா?
எத்தனை பிறவி எடுத்திடினும்
ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்!
ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி
ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி
ஓய்ந்து போனது மனித உணர்வுகள்
ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து

அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

Wednesday, October 27, 2010

" இனிமை "


என் ஐபாடில் இல்லையே
உன் குரல் போல்
இனிமையாய்.........!!!


written by Raj
my close friend

Tuesday, October 26, 2010

"என் தேசத்தை காணவில்லை"ஏ உலக மக்களே !!!
இங்கு என் தேசத்தை காணவில்லை
யாரேனும் கண்டீர்களா?
இந்தியா என்றொரு புண்ணிய பூமி இருந்தது
யாரேனும் கண்டீர்களா?
என் தேசத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும்
உயர்ந்த ஒழுக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்
யாரேனும் கண்டீர்களா?
கூட்டுக் குடும்பமாய் குருவி கூடுகளைப்
போல வாழ்ந்து வரும்
என் தேச மக்களை எங்கேனும் கண்டீர்களா?
என் தேசத்தில் ஒரு மாநில மக்களுக்கு துன்பம்
என்றால் இன்னொரு மாநிலத்தவர்
உயிரையும் கொடுப்பார்களே
கண்டீர்களா என் தேச மக்களை?
பல நாட்டு மக்களும் என் நாட்டு
கலாச்சாரத்தை பார்த்து
வியந்து கொண்டு இருப்பார்களே
கண்டீர்களா அவர்களை?
என் கொள்ளு பாட்டன் காந்தியும்
என் மாமா நேருவும் வாழ்ந்த
என் புண்ணிய தேசத்தை கண்டீர்களா?
என் பாட்டன் மார்கள் ரத்தம் சிந்தி
சுதந்திரம் வாங்கிய என்
புண்ணிய பூமியை கண்டீர்களா?
என் தாய் மார்கள் என் தாய் மக்களுக்கு
வீரப் பால் ஊட்டி வளர்த்தார்களே
அப்படிப் பட்ட என் வீர பூமியை கண்டீர்களா?
சகோதர பாசத்தில் சாணக்கியனை
தோற்கடிக்கும் என் தேச சிங்கங்களை
பார்த்தீர்களா?
ஏ மூடனே!!!
அதோ உன் தேசம்!!
காமத்திற்காக பெற்ற மகளின் கற்பை
சூறையாடும் காமுகர்கள் நிறைந்த
உன் புண்ணிய தேசத்தை பார்!!!
தண்ணீருக்காக உன் மாநில மக்கள்
அடித்துக் கொள்ளும் அவலத்தை பார்!!!
கள்ளக் காதலுக்காக கட்டிய கணவனை
கொலை செய்யும் பெண்கள் நிறைந்த
உன் தேசத்தை பார்!!!
அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படும்
உன் குல வீர புருஷர்களைப் பார்!!!
தீவிரவாதம் என்ற பெயரில்
உன் தேசத்தை கூறு போடும்
உன் அன்னை பூமியை பார்!!!
அமைதிப் பூங்காவான உன் தேசம்
இப்பொழுது அமைதி இழந்து
தவிக்கும் அவலத்தைப் பார்!!!
பெற்ற தாய் தந்தையர்களை அனாதையாக
தவிக்க விடும் உன் தேச புருஷர்களை பார்!!!
வீதிக்கொரு கொலையும் ஜாதிக்கொரு கொலையும்
நடக்கும் உன் இந்திய தேசத்தை பார்!!!
அடுப்புடன் சேர்ந்து மனித உயிர்களும்
எரிந்து கொண்டிருக்கும் கொடுமையைப் பார்!!!
உன் அன்னை பூமியின் நெஞ்சிற்கு
தினம் ரத்தத்தை அருவியாக்கும்
உன் சொர்க்க பூமியை பார்!!!
அரசியல் என்ற பெயரில் உன் தேசத்தை
சுரண்டும் அரசியல்வாதிகளைப் பார்!!!
காமத்திற்காக உன் நாட்டு பெண்கள்
சீரழிக்கப் படும் அவலத்தைப் பார்!!!
ஐயோ!!! ஐயோ!!! ஐயோ!!!
இதுவா ஏன் தேசம்!!?!!
கண்ணீரையும் ரத்தத்தையும் சிந்தி
சுதந்திரம் வாங்கிய இதுவா ஏன் தேசம்!?!
என் அன்னை பூமியா இப்படி
களங்கப் பட்டு நிற்ப்பது!!?!!
என் வீர இளைஞர்கள் பகத்சிங்கும்,
நேதாஜியும், விவேகனந்தனும்
வாழ்ந்த என் அன்னை பூமியா இது!!?!!
ஏ பைத்தியமே !
இன்று வந்து உன் தேசத்தைத்
தேடும் நீ யார்?
என் தேசத்தின் மூசுக் காற்றை சுவாசிக்க
வந்த ஓர் இந்தியக் குழந்தை.
ஏ தோழனே!
இன்று என் தேசத்தை கடந்து
செல்லும் நீ யார்?
ஆ.. நானா?
என் முனோர்கள் சொன்னார்கள்
உன் தேசத்தைப் பற்றி.
ஒரு ஜென்மம் இங்கு வாழ்ந்து விட்டு
செல்ல வந்தேன்.
ஆனால் இங்கு உன் தேசத் தாய்
கேட்பாரற்று சிதைந்து கொண்டு
இருக்கிறாள்.
ஆகவே மீண்டும் என் தேசம் போகிறேன்
மறு ஜென்மம் எடுக்க!!!
ஏ இந்திய பதர்களே!
கேட்டீர்களா!?!கேட்டீர்களா!?!கேட்டீர்களா!!
என் தேசத்தின் அவல நிலையைப்
பற்றி கேட்டீர்களா?
வாழ்க்கையை செம்மைப் படுத்த
வள்ளுவன் எழுதிய திருக்குறளை படித்த
என் தேசத்தின் அவலத்தைப் பார்த்தீரா?
ஓ பாரதத் தாயே!!!
எங்ஙனம் தாங்குகிறாய்? எப்படி தாங்குகிறாய்?
ஏ மகாத்மாவே!
எடுத்து வா இன்னொரு ஜென்மம்.
ஏ நேதாஜியே!
எழுந்து வா கல்லறையை விட்டு.
அம்மாவின் கருவில் தூங்கும்
என் இளவல்களே!
குதித்து வாருங்கள்...
மீண்டும் ஒரு யுத்தம் நடத்த வேண்டும்.
ஆம் !!! நம் அன்னை பூமியின் கண்ணீரைத்
துடைக்க நாம் யுத்தம் நடத்த வேண்டும்.
வைரமுத்து கேட்டதுப் போல் இந்த பூமியை
சலவை செய்ய வேண்டும்!!
சலவை செய்ய வேண்டும்!! சலவை செய்ய வேண்டும்!!
வாருங்கள் இந்தியாவை தூக்கி நிறுத்த..................!!!!

Tuesday, September 21, 2010

"தவற விட்ட பொக்கிஷங்கள்"* இரவு பத்து மணிக்கு பிறகு கடற்கரையில்
அமர்ந்து பவுர்ணமியை ரசித்து
பார்க்கும் தருணம்.


* நண்பனுக்கு பண உதவி, பொருள் உதவி
என்றால் அம்மாவின் அனுமதிக்காக

காத்திருக்காத நேரம்.

* நண்பனை மச்சி, மாமா என்று

வாஞ்சையோடும் உரிமையோடும்

பேசும் வார்த்தைகள்.


* பள்ளி நாட்களில் நட்ட நடு ராத்திரியில்

ரோட்டோர டீ கடையில் நண்பனோடு
டீ குடிக்கும் திருட்டு இரவுகள்.


* சாலையோர பானிபூரி கடையில்
பசங்களோடு பசங்களாக நின்று
பானிபூரி சாப்பிடும் வாய்ப்பு.


* நண்பன் வீட்டு கல்யாணத்தில் குடும்பத்தில்
ஒருவராக முன் நின்று நடத்தும்
பொன்னான நாட்கள்.


* ஆண் நண்பர்களோடு அடிக்கடி
பைக்கில் உல்லாச பயணம்
செல்லும் இன்ப சுற்றுலா.


* இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்
நண்பர்களோடு சினிமா பார்க்கும்
உன்னத நாட்கள்.


* நியூ இயர், பண்டிகை நாட்களில்
நண்பர்களோடு மணிகணக்கில்
கடற்கரையில் அரட்டை.


* நண்பன் கொடுத்த பணத்தை திருப்பி
கொடுக்கும் போது'மச்சி அடி வாங்க போற'
என்று சொல்லும் செயல்.


* தேர்வில் நண்பன் தோல்வி என்றால்
'மச்சி' வாத்தியார் வீட்ல சண்டை போலருக்கு
என்னையும் பெயில் ஆக்கிவிட்டார் என்று
நண்பனுக்காக கூறும் நகைச்சுவை.


* திருமணமாகியும் நிலைத்து நிற்கும்
நண்பனின் நட்பு.


* தனிமையில் ஊரு விட்டு ஊரு
நாடு விட்டு நாடு செல்லும்
தொலை தூர பயணம்.


* பொது இடத்தில நண்பனின் தோல் மீது

கை போட்டு அடிக்கும் சின்ன சின்ன

சேட்டை.


* நாடு சாமத்தில் யாருமற்ற

ராத்திரியில் நாடு வீதியில்

கால் வலிக்க நடக்கும் நாட்கள்.


இவை அனைத்தும் நான்

பெண்ணாக பிறந்ததால்

தவற விட்ட மிகப் பெரிய பொக்கிஷங்கள்.

"தவற விட்ட பொக்கிஷங்கள்"

எனது சின்ன சின்ன சந்தோஷங்களை

நிறைவேற்றிக் கொள்ள மீண்டும்

ஒரு பிறவி வேண்டும் .

அப்பொழுது பெண்ணாக அல்ல

ஆணாக பிறக்கும் மிகப் பெரிய

வரம் வேண்டும்.!!!!!!!!!