Skip to main content

Posts

Showing posts from August, 2009

"நிராகரிப்பு"

நான் விரும்பும் எதுவும் இதுவரை என் வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதனால் தான் நான் விரும்பும் என் மரணம் கூட நிராகரிக்கப் படுகிறதோ?!!!.......

காற்று

உடல் இல்லை உன்னிடம். உயிர் இல்லை. உன்னிடம். மென்மையாய் தழுவி செல்கிறாய். நான் ஒரு பெண் என்பதையும் மறந்து............!

"உருகிட நினைத்தேன்"

பெண்ணே! உன் பார்வை வீச்சில் என் வாழ்நாளை அற்பனிக்கத்தான் நினைத்தேன். நீ கொஞ்சி பேசும் பிஞ்சு மொழியில் என்னை மறந்து உருகிடத்தான் நினைத்தேன்... உன் மல்லிகைப் பூ புன்னகையில் மனதை பறிகொடுக்கத்தான் நினைத்தேன்.. உன் கால் கொலுசின் ஓசையில் வரும் சங்கீதத்தில் நான் கவிதைகள் பாடத்தான் நினைத்தேன்.. உன் கண்கள் பேசும் மொழியை என் இதய சிறைக்குள் பாதுகாக்கத் தான் நினைத்தேன். உன்னை அடைந்து என்றும் என் வாழ்க்கையை பௌர்ணமியாக மாற்றிக்கொள்ளத்தான் நினைத்தேன்.. ஆனால் ஏற்கனவே ஒரு காதல் "தோல்வியைக் கற்றுத் தராமல்" இருந்திருந்தால்..... l

"முதிர்கன்னியின் ஆசை"

வாசலிலே மாவிலை தோரணம் தொங்க வாழை மரங்கள் வாசலை அலங்கரிக்க மங்கள வாத்தியங்கள் வீதியுலா வர மங்கையவள் தோழியர் புடை சூழ பட்டு சேலை சரசரக்க முகமெங்கும் வெட்கம் புன்னகையாய் ஆட்கொள்ள மணமகன் அருகில் மங்கையவள் நாணமுடன் அமர மங்கள வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை தாலி கட்டும் வேளையில் யாரோ தட்டி எழுப்பியதால் தூக்கம் கலைந்தது... கனவில் கூட நிறைவேறாத முதிர் கன்னியின் திருமணம்............

"வரதட்சனைக் கொடுமை"

படித்து பட்டம் பெற்ற பெண்ணானாலும் படிக்காத பாமர பெண்ணானாலும் கொடுமைகள் சமமானது தான், ஆம் வரதட்சனை என்னும் கொடுமை....

"கௌரவப்பட்டம்"

என் மகளே! நான் பிறந்தபோது என் தாய் பெற்ற பேரானந்தத்தை என்னையும் பெற வைத்தாய்..... கோடானு கோடி கொட்டிகொடுத்தும் பல பேருக்கு கிடைக்காத "அம்மா" என்ற ஸ்தானத்தை இந்த அபலையின் வயிற்றில் அவதரித்து நீ எனக்கு அளித்தாய்.... ஊரார் பேசும் "மலடி" என்ற சொல் அம்புகளிலிருந்து என்னைக் காத்தருளினாய்.... என் காதல் திருமணத்தில் பிரிந்த உன் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி உறவுகளை மீண்டும் உன் பிறப்பின் மூலம் மீட்டுக் கொடுத்தாய்... என் கண்ணே! நீ பிறந்த போதுதானடி எப்போதும் முகம் சுளிக்கும் அப்பா வீட்டுப் பாட்டியின் முகத்தில் புன்னகையைக் காண்கிறேன்... நீ தத்தித் தத்தி நடந்து வந்து தாத்தாவை பொக்கை வாய் தெரிய சிரிக்க வைத்து என் மீது கொண்ட கோபத்தை தனிய வைத்தாய்..... என் செல்லமே! நீ அம்மா என்று அழைக்கும் மழலைச் சொல்லை வேறு மொழியோடு ஒப்பிட வழி தெரியாமல் தவிக்கிறேன்... அம்மா என்ற கௌரவப் பட்டம் அளித்து இப்பிறவியை எனக்கு புனிதப்படுத்திக் கொட

"கல்லறையில் இடமில்லை"

மனிதா! மறந்தும் காதல் செய்து விடாதே........ கல்லறையில் இடமில்லை...... .

"அதிஷ்டம் "

அன்பே! உன் நெற்றியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுக்கு இருக்கின்ற அதிஷ்டம் கூட ஒரு மனிதனாக பிறந்த எனக்கு இல்லையே ........... .

"நீ மட்டும்"

கண்கள் குருடாகி போகட்டும் பரவாயில்லை... காதுகள் செவிடாகி போகட்டும் பரவாயில்லை... வாய் ஊமையாகி போகட்டும் பரவாயில்லை... ஆனால் இந்தியாவே "நீ மட்டும்" தோற்றுப் போகாதே ..

"மூச்சுக் காற்று"

எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் இந்தியாவே! நீயே என் "தாய் நாடாக" இருக்க வேண்டும். எத்தனை பிறப்பு பிறந்து வந்தாலும் என் அன்னையே உன் "திருவயிற்றில்" நான் பிறக்க வேண்டும். எத்தனை பிறவி எடுத்து வந்தாலும் என் நட்பே நீயே என் "மூச்சுக் காற்றாக" இருக்க வேண்டும்.. ..

"மௌனப் போராட்டம்"

வீடே கோலாகலமாகவும் குதுகலமாகவும் இருந்தது. முதல் இரவுக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்தாள் வினிதா. சுற்றிலும் தோழிகளின் கிண்டல் கேலி பேச்சுகள். ஏய் , வினி! ரூம்ல போய் முதல்ல என்ன தெரியுமா செய்யுற? என்ன செய்யணும்? ஜன்னல் கதவு இருக்கு இல்ல அத சாத்திடு. ஏன்னா மாப்ள ஜன்னல் வழியா எங்கள பார்த்துட்டு நீ வேண்டாம் உன் தோழிகள் தான் வேணும்னு சொல்லிட போர்ர்ரார்ரு ஓகே வா. இதை தோழிகளில் ஒருத்திக் கூற அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள். இப்படியே பேசிக்கொண்டு இருந்ததில் மணி ஒன்பது ஆகி இருந்தது. ஏய் போதும் அவல கொண்டு போய் ரூம்ல விடுங்கடி. மாப்ள டென்ஷன் தாங்க முடியாம இவள வந்து குண்டு கட்டாத் தூக்கிட்டு போய்ட போகிறார் டி. இப்படி மற்றொருத்திக் கூற மீண்டும் சிரிப்பலை. வினிதா பால் சொம்புடன் உள்ளே வந்தாள். இவள் வந்ததுக் கூடத் தெரியாமல் கெளதம் சிகரெட் ஒன்றைப் புகைத்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்த படி உட்கார்ந்து இருந்தான். கெளதம் வந்து கையை பிடித்து மார்போடு அனைத்து அழைத்துச் செல்வான் என எதிர் பார்த்தாள். அவன் அப்பட