Skip to main content

Posts

Showing posts from 2012

வேண்டுமொரு தாய்

களத்து   மேட்டில்   நெல்   அடித்து குளத்து    மேட்டில்   துணி   துவைத்து கட்டு   சோறு   கட்டி   என்னை கல்வி   கற்க   அனுப்பினாய்   அம்மா .... காடு   மேடு   சுற்றி   வந்து காவல்   நீ   எனைக்   காத்து கழனி   சென்று   விறகு   வெட்டி கால்   வயிறு   காஞ்சி   ஊற்றினாய்   அம்மா ..... கட்டியவன்   காப்பாற்ற   வழியற்று கைவிட்டான்   உன்னை கந்து   வட்டி   கடன்   வாங்கி கலெக்டர்   எனை   ஆக்கினாய்    அம்மா ... காடு   சுற்றி   களைத்தவளை முதுகு   தேய   உழைத்தவளை ஊர்   போற்ற   வாழ   வைக்க பிள்ளை   நான்   எண்ணினேன்   அம்மா ... கடைசி   ஒரு   ஆசை   என்று கல்யாணம்   பண்ணி   வைத்தாய் கட்டிய   தாலி   மஞ்சள்   காயுமுன்னே கட்டியவள்   தள்ளி   வைக்க   சொன்னால்   உன்னை ... மனையறம்   தான்   முக்கியமென்று மனைவி   வழி   போகச்   சொன்னாய் கலெக்டரே   ஆனாலும் கணவன்   என்ற   முறையில்   வாழச்   சொன்னாய் .... பெற்றவளை   பிள்ளை   பாசத்திற்கு ஏங்க    வைத்து   பிள்ளை   நான் பிரிந்து   சென்றேன் கட்டியவள்   வழி   நடத்த .... கஞ்சி   ஊற்ற   நாதியற்று கல்லறையில்   உறங்கிப்   போனாய் கதியற்

கருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்

அம்மா ! என்   பிறப்பின்   நேரம்   நெருங்கி   விட்டது . அதற்கு   முன்   என்   கடிதத்திற்கு   பதில்   அளித்து   விடு ... கருவில்   என்னை   நீ   சுமந்து   கொண்டு   இருக்கும்   போதே அண்ணல்   காந்தியைப்   பற்றிப்   படித்தாய் . மாமா   நேருவைப்   பற்றி   படித்தாய் . அப்துல்கலாமை   பற்றி   படித்தாய் . நேதாஜி ,  விவேகானந்தன் ,  பகத்   சிங் பற்றியெல்லாம்   படித்தாய் . கல்பனா   சாவ்லா ,  சுனிதா   வில்லியம்ஸ் பற்றியும்   படித்தாய் . ராமாயணம் ,  இதிகாசம் ,  பகவத்   கீதை பற்றிக்கூட   படித்தாய் . தவறு   செய்யும்   மனிதனுக்கு   என்ன தண்டனை   கிடைக்கும்   என்பதற்க்கான நீதிக்   கதைகளையும்   படித்தாய் . பாரத   பூமியைப்   பற்றிப்   படித்தாய் . பக்கத்து   நாடுகளைப்   பற்றியும்   படித்தாய் . இந்தியக்   கலாச்சாரம் ,  குடும்பம் ,  பாரம்பரியம்   பற்றிகூட   படித்தாய் . யுத்தம் ,  வரலாறு ,  அறிவியல் பற்றியும்   படித்தாய் . இந்திய   அரசியலையும்   படித்தாய் . எனக்காக  A,B,C,D,  அ ,  ஆ   வையும் சேர்த்து   படித்தாய் . நல்லவர்களைப்   பற்றிப்   படித்தாய் . போராளிகளைப்   பற்றிப்   படித்தாய

யுத்தபூமியா? ரத்தபூமியா?

அனாதைகளாய் திரிகின்றோம் ஆதரவு கரம் நீட்டுவோர் இல்லை இலங்கை என்ன யுத்த பூமியா ? இல்லை ரத்த பூமியா ? ஈன்ற அன்னை மாண்டு போனது தெரியாமல் உயிர் பால் தேடுகின்றன பச்சிளம் பிஞ்சுகள்   ஊருக்கு உபதேசம் செய்யும் எந்தன் தாய் திருநாடு – தமிழ் ஏழைகளின் உயிர் காக்க மறந்தது ஏனோ ? ஐயம் ! ஐயம் ! ஐயம் ! என்றே   விடிகிறது ஒவ்வொரு விடியலும் . ஓலம் ! எங்கு நோக்கினும் மரண ஓலங்கள்   - இலங்கை ஒளயத்தில்   மனித உயிர்கள் விலையின்றி    விற்கப்படுகின்றன . அக்தோ   பரிதாபம் .............