Skip to main content

Posts

Showing posts from September, 2009

அனுபவம்

அம்மாவின் செல்லமகளாய் அப்பாவின் பாசக்குழந்தையாய் சித்தப்பாவின் குட்டிதேவதையாய் அத்தையின் சுட்டிப்பெண்ணாய் பாட்டியின் அன்பையும் அனுபவித்து வளர்ந்தபோது அம்மாவின் வயிறு வீங்கியது. அடுத்துப் பெறப்போகும் பிள்ளைக்காக. அன்னையின் முலைப்பாலை பகிர்ந்துகொள்ள தங்கை வந்தாள். என்மீது அன்புக்காட்டிய சொந்தமெல்லாம் தங்கைமீது சாய்ந்து விட்டது அன்னை உள்பட அவள்மீது அன்புக் காட்ட. ஏனோ என்கோபம் எல்லாம் முத்தத்திற்கு ஒரு சாக்லேட் கொடுக்கும் சித்தப்பாவின் மீதும் அல்ல. வாரியணைத்து முத்தமிடும் பாட்டியின் மீதும் அல்ல கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் அத்தையின் மீதும் அல்ல என்னை மார்பின் மீது போட்டுத்தூங்கும் தந்தையின் மீதும் அல்ல என்னைக்கருவில் சுமந்து பாசத்தை பகிர்ந்து கொடுத்த தாய்மீது மட்டுமே.. தங்கையை கொஞ்சும் போதும் அவளின் தளர்நடையை ரசிக்கும்போதும் கைநீட்டி தாயை தூக்கச் சொன்ன தங்கையை கிழேதள்ளி என்னைமட்டும் தூக்குஎன்று அன்னையருகில் சென்றபோது என்னை அடித்துவிட்டு அழும்தங்கையை தூக்கி சமாதானப்படுத்தும்போது இன்னும் கோபம் அதிகமானது அன்னை மீது. என்னை தமிழிலும் தங்கையை ஆங்கிலப் பள்ளியிலும் ப

"எதை சாதித்தாய்"

குனிந்தால் குழந்தைக்கு வலிக்குமோ உருண்டு பிரண்டால் எந்தன் பட்டுமேனி நோகுமோ என்று கருவிலிருந்தே என்மீது அன்பு கொண்டு பிறந்ததுமுதல் நேற்று வரை சீராட்டி பாராட்டி வளர்த்து தன் ரத்தத்தை பாலாக்கி பசியாற்றிய என் அன்னை இன்று என்னருகில் இல்லை........ பிஞ்சு கையால் அடிக்கும்போது வலிக்காத போதும் வலிக்கின்ற மாதிரி நடித்து என்னை சந்தோஷப் படுத்தி நான் கேட்டது மட்டும்மல்ல கேட்காததையும் வாங்கிக் கொடுத்த என் தந்தை இன்று என்னருகில் இல்லை.... அடிக்கடி சண்டை போட்டாலும் நோய் என்று வரும்போது அன்னையுடன் சேர்ந்து எனக்காக கண்கலங்கும் என் தங்கை இன்று என்னருகில் இல்லை.... எங்கு சென்றாலும் எனக்கு பிடித்ததை வங்கிக் கொண்டு என்னுடன் செல்லமாக சண்டையிடும் அன்னையைக் கண்டித்து நான் மகிழ்வதைப் பார்த்து மகிழ்ச்சிக் கொண்ட என் அண்ணன் இன்று என்னருகில் இல்லை.... ராசியான பெண், சுட்டிப் பெண், அழகான பெண் என அழகாய் இல்லாதபோதும் அழகாய் இருக்கிறாய் என் ராசாத்தி என டிஷ்ட்டி கழிக்கும் என் பாட்டி இன்று என்னருகில் இல்லை... இவ்வளவு உயிருக்கு உயிரான உறவுகளை உதறி எதை சாதித்தாய் என் காதலே! நம்பிய காதலன்

"இறுதிவரை உன்னோடு"

மணக்கோலத்தில் அமர்ந்து இருந்தான் விஜய். "முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு, பொண்ண அழச்சிட்டு வாங்கோ" என்ற ஐயரின் குரல் கேட்டு மணப்பெண்ணை அழைக்க தோழிகள் விரைந்தனர். குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்தாள் திவ்யா. மனப் பெண்ணுக்கே உரிய வெட்கம், புன்னகை அனைத்தும் முகத்தில் சூழ்ந்து கொள்ள மெல்ல நடந்து வந்து மாலை சூடும் மன்னவன் அருகில் அமர்ந்தாள். மங்கள வாத்தியம் முழங்கவே இனிதே நடைபெற்றது திருமணம். தாழ்ப்பாள் விலகும் ஓசை கேட்கவே, திரும்பி பார்த்தான் விஜய். திவ்யா வெட்கமுடன் அவனை நோக்கி வந்து கொண்டு இருந்தாள். பால் சொம்பை மேஜையின் மீது வைத்து விட்டு அவன் காலில் விழுந்து வணங்கினாள். "நல்லாயிரு" என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கூறி விட்டு அவளை தொட்டு தூக்காமல் அப்படியே அமர்ந்து இருந்தான். அவளாகவே எழுந்து கட்டிலின் மேல் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள். நாம கொஞ்சம் பேசலாமா? என்று விஜய் தான் முதலில் ஆரம்பித்தான். ஓ! பேசலாமே. என்ன பேசலாம் என்று ஆர்வமுடன் கேட்டாள். நீ B.Com., முடிச்சி இருக்க இல்லியா! காலேஜ்ல படிக்கும் போது எத்தனை பேர லவ் பண்ண? இல்