Skip to main content

Posts

Showing posts from 2023

தேடிச் சோறு நிதம் தின்று/பாரதியார் கவிதை/தமிழும் நானும்/தமிழ் கவிதை/பாரதி

                                                           ஆறாம் விறல் எழுச்சிமிகு சமுதாயத்தின் மாண்புமிகு இளைய தேசமே!! மன்னராட்சி மலர்ந்திருந்த காலத்தில் கூட வேசியார் குலமங்கை கர்ப்பிற்கினியல் மாதவி  கற்புடன் வாழ்ந்த வசந்த காலம்  ஆறாம் விரலாய் நினைவலையில்....  மழலையாய் , குழந்தையாய்,சிறுமியாய்,சாமியாய், குலதெய்வமாய் பார்க்க வேண்டிய பெண்ணியர்குல இளங்குருத்துகள், காமக் கயவர்களின் கடுந்தீயில் கருகி மடிகின்றன. பதின்முன் பருவத்தில் ஈன்றவளின் முன்னே  அரை நிர்வாணமாய் நிற்பதற்குக்கூட உடல்கூசும்  எம்பெண்ணியர்களின் கற்பை வன்முறையாய் பறிக்கும்  இழிசெயல்கள் இரக்கமின்றி நடைபெறுகிறது. அரசனே ஆனாலும் மங்கையின் விருப்பம்  முதலுரிமை ஆக்கப்பட்டு சுயம்வரம் நடந்தது. ஆனால் இன்று நங்கையின் விருப்பம் மறுக்கப்பட்டாலும்  அமிலத்தை அடித்து வாழும்போதே தினம் தினம்  தூக்கிலிடப்படுகிறார்கள் எம்கலியுக கண்ணகிகள். முளைப்பாலின் சுவைமறக்காத பிஞ்சுகளிடம்கூட  பாலுறவை நாடும் கபோதிகள்.. கற்சிலையையும் கற்பழிக்க துணிந்தவர்கள். இங்கே கருவறை குழந்தைகள் மட்டுமே  கற்புடனும் உயிருடனும்.. நரகாசுரனுக்கே நல்லவன் முத்திரை குத்தப்பட வேண