Tuesday, November 2, 2010

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"


அற்புதம் என்று நடக்குமென்று

ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா!
இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள்
ஈவதற்கு மனித மனம் உண்டோ?
உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம்
ஊர் வாழ துணை நிற்குமா?
எத்தனை பிறவி எடுத்திடினும்
ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்!
ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி
ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி
ஓய்ந்து போனது மனித உணர்வுகள்
ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து

அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

Wednesday, October 27, 2010

" இனிமை "


என் ஐபாடில் இல்லையே
உன் குரல் போல்
இனிமையாய்.........!!!


written by Raj
my close friend

Tuesday, October 26, 2010

"என் தேசத்தை காணவில்லை"ஏ உலக மக்களே !!!
இங்கு என் தேசத்தை காணவில்லை
யாரேனும் கண்டீர்களா?
இந்தியா என்றொரு புண்ணிய பூமி இருந்தது
யாரேனும் கண்டீர்களா?
என் தேசத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும்
உயர்ந்த ஒழுக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்
யாரேனும் கண்டீர்களா?
கூட்டுக் குடும்பமாய் குருவி கூடுகளைப்
போல வாழ்ந்து வரும்
என் தேச மக்களை எங்கேனும் கண்டீர்களா?
என் தேசத்தில் ஒரு மாநில மக்களுக்கு துன்பம்
என்றால் இன்னொரு மாநிலத்தவர்
உயிரையும் கொடுப்பார்களே
கண்டீர்களா என் தேச மக்களை?
பல நாட்டு மக்களும் என் நாட்டு
கலாச்சாரத்தை பார்த்து
வியந்து கொண்டு இருப்பார்களே
கண்டீர்களா அவர்களை?
என் கொள்ளு பாட்டன் காந்தியும்
என் மாமா நேருவும் வாழ்ந்த
என் புண்ணிய தேசத்தை கண்டீர்களா?
என் பாட்டன் மார்கள் ரத்தம் சிந்தி
சுதந்திரம் வாங்கிய என்
புண்ணிய பூமியை கண்டீர்களா?
என் தாய் மார்கள் என் தாய் மக்களுக்கு
வீரப் பால் ஊட்டி வளர்த்தார்களே
அப்படிப் பட்ட என் வீர பூமியை கண்டீர்களா?
சகோதர பாசத்தில் சாணக்கியனை
தோற்கடிக்கும் என் தேச சிங்கங்களை
பார்த்தீர்களா?
ஏ மூடனே!!!
அதோ உன் தேசம்!!
காமத்திற்காக பெற்ற மகளின் கற்பை
சூறையாடும் காமுகர்கள் நிறைந்த
உன் புண்ணிய தேசத்தை பார்!!!
தண்ணீருக்காக உன் மாநில மக்கள்
அடித்துக் கொள்ளும் அவலத்தை பார்!!!
கள்ளக் காதலுக்காக கட்டிய கணவனை
கொலை செய்யும் பெண்கள் நிறைந்த
உன் தேசத்தை பார்!!!
அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படும்
உன் குல வீர புருஷர்களைப் பார்!!!
தீவிரவாதம் என்ற பெயரில்
உன் தேசத்தை கூறு போடும்
உன் அன்னை பூமியை பார்!!!
அமைதிப் பூங்காவான உன் தேசம்
இப்பொழுது அமைதி இழந்து
தவிக்கும் அவலத்தைப் பார்!!!
பெற்ற தாய் தந்தையர்களை அனாதையாக
தவிக்க விடும் உன் தேச புருஷர்களை பார்!!!
வீதிக்கொரு கொலையும் ஜாதிக்கொரு கொலையும்
நடக்கும் உன் இந்திய தேசத்தை பார்!!!
அடுப்புடன் சேர்ந்து மனித உயிர்களும்
எரிந்து கொண்டிருக்கும் கொடுமையைப் பார்!!!
உன் அன்னை பூமியின் நெஞ்சிற்கு
தினம் ரத்தத்தை அருவியாக்கும்
உன் சொர்க்க பூமியை பார்!!!
அரசியல் என்ற பெயரில் உன் தேசத்தை
சுரண்டும் அரசியல்வாதிகளைப் பார்!!!
காமத்திற்காக உன் நாட்டு பெண்கள்
சீரழிக்கப் படும் அவலத்தைப் பார்!!!
ஐயோ!!! ஐயோ!!! ஐயோ!!!
இதுவா ஏன் தேசம்!!?!!
கண்ணீரையும் ரத்தத்தையும் சிந்தி
சுதந்திரம் வாங்கிய இதுவா ஏன் தேசம்!?!
என் அன்னை பூமியா இப்படி
களங்கப் பட்டு நிற்ப்பது!!?!!
என் வீர இளைஞர்கள் பகத்சிங்கும்,
நேதாஜியும், விவேகனந்தனும்
வாழ்ந்த என் அன்னை பூமியா இது!!?!!
ஏ பைத்தியமே !
இன்று வந்து உன் தேசத்தைத்
தேடும் நீ யார்?
என் தேசத்தின் மூசுக் காற்றை சுவாசிக்க
வந்த ஓர் இந்தியக் குழந்தை.
ஏ தோழனே!
இன்று என் தேசத்தை கடந்து
செல்லும் நீ யார்?
ஆ.. நானா?
என் முனோர்கள் சொன்னார்கள்
உன் தேசத்தைப் பற்றி.
ஒரு ஜென்மம் இங்கு வாழ்ந்து விட்டு
செல்ல வந்தேன்.
ஆனால் இங்கு உன் தேசத் தாய்
கேட்பாரற்று சிதைந்து கொண்டு
இருக்கிறாள்.
ஆகவே மீண்டும் என் தேசம் போகிறேன்
மறு ஜென்மம் எடுக்க!!!
ஏ இந்திய பதர்களே!
கேட்டீர்களா!?!கேட்டீர்களா!?!கேட்டீர்களா!!
என் தேசத்தின் அவல நிலையைப்
பற்றி கேட்டீர்களா?
வாழ்க்கையை செம்மைப் படுத்த
வள்ளுவன் எழுதிய திருக்குறளை படித்த
என் தேசத்தின் அவலத்தைப் பார்த்தீரா?
ஓ பாரதத் தாயே!!!
எங்ஙனம் தாங்குகிறாய்? எப்படி தாங்குகிறாய்?
ஏ மகாத்மாவே!
எடுத்து வா இன்னொரு ஜென்மம்.
ஏ நேதாஜியே!
எழுந்து வா கல்லறையை விட்டு.
அம்மாவின் கருவில் தூங்கும்
என் இளவல்களே!
குதித்து வாருங்கள்...
மீண்டும் ஒரு யுத்தம் நடத்த வேண்டும்.
ஆம் !!! நம் அன்னை பூமியின் கண்ணீரைத்
துடைக்க நாம் யுத்தம் நடத்த வேண்டும்.
வைரமுத்து கேட்டதுப் போல் இந்த பூமியை
சலவை செய்ய வேண்டும்!!
சலவை செய்ய வேண்டும்!! சலவை செய்ய வேண்டும்!!
வாருங்கள் இந்தியாவை தூக்கி நிறுத்த..................!!!!

Tuesday, September 21, 2010

"தவற விட்ட பொக்கிஷங்கள்"* இரவு பத்து மணிக்கு பிறகு கடற்கரையில்
அமர்ந்து பவுர்ணமியை ரசித்து
பார்க்கும் தருணம்.


* நண்பனுக்கு பண உதவி, பொருள் உதவி
என்றால் அம்மாவின் அனுமதிக்காக

காத்திருக்காத நேரம்.

* நண்பனை மச்சி, மாமா என்று

வாஞ்சையோடும் உரிமையோடும்

பேசும் வார்த்தைகள்.


* பள்ளி நாட்களில் நட்ட நடு ராத்திரியில்

ரோட்டோர டீ கடையில் நண்பனோடு
டீ குடிக்கும் திருட்டு இரவுகள்.


* சாலையோர பானிபூரி கடையில்
பசங்களோடு பசங்களாக நின்று
பானிபூரி சாப்பிடும் வாய்ப்பு.


* நண்பன் வீட்டு கல்யாணத்தில் குடும்பத்தில்
ஒருவராக முன் நின்று நடத்தும்
பொன்னான நாட்கள்.


* ஆண் நண்பர்களோடு அடிக்கடி
பைக்கில் உல்லாச பயணம்
செல்லும் இன்ப சுற்றுலா.


* இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்
நண்பர்களோடு சினிமா பார்க்கும்
உன்னத நாட்கள்.


* நியூ இயர், பண்டிகை நாட்களில்
நண்பர்களோடு மணிகணக்கில்
கடற்கரையில் அரட்டை.


* நண்பன் கொடுத்த பணத்தை திருப்பி
கொடுக்கும் போது'மச்சி அடி வாங்க போற'
என்று சொல்லும் செயல்.


* தேர்வில் நண்பன் தோல்வி என்றால்
'மச்சி' வாத்தியார் வீட்ல சண்டை போலருக்கு
என்னையும் பெயில் ஆக்கிவிட்டார் என்று
நண்பனுக்காக கூறும் நகைச்சுவை.


* திருமணமாகியும் நிலைத்து நிற்கும்
நண்பனின் நட்பு.


* தனிமையில் ஊரு விட்டு ஊரு
நாடு விட்டு நாடு செல்லும்
தொலை தூர பயணம்.


* பொது இடத்தில நண்பனின் தோல் மீது

கை போட்டு அடிக்கும் சின்ன சின்ன

சேட்டை.


* நாடு சாமத்தில் யாருமற்ற

ராத்திரியில் நாடு வீதியில்

கால் வலிக்க நடக்கும் நாட்கள்.


இவை அனைத்தும் நான்

பெண்ணாக பிறந்ததால்

தவற விட்ட மிகப் பெரிய பொக்கிஷங்கள்.

"தவற விட்ட பொக்கிஷங்கள்"

எனது சின்ன சின்ன சந்தோஷங்களை

நிறைவேற்றிக் கொள்ள மீண்டும்

ஒரு பிறவி வேண்டும் .

அப்பொழுது பெண்ணாக அல்ல

ஆணாக பிறக்கும் மிகப் பெரிய

வரம் வேண்டும்.!!!!!!!!!

Tuesday, September 7, 2010

"பெண்ணடிமை"


என்றோ
விடிந்தது
எமக்கான
விடியல்!!!
ஆனால்
இன்றும்
விடியலை
நோக்கியே
பயணம்............................!!!

Saturday, May 29, 2010

சின்ன சின்ன ஆசைகள் (2)


ஆழ் கடலின் மேல் நடந்து செல்ல
இரண்டடி பாதை வேண்டும்.
துன்பத்தில் தோல் சாய்ந்து கொள்ள
கணவன் என்ற பெயரில் நண்பன் வேண்டும்.
கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக
நட்பின் கரங்கள் வேண்டும்.
கடந்த கால வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை
திருத்தி வாழ டேப் ரெகார்டரை போலவே
எனக்கும் ஒரு ரீவைன் பட்டன் வேண்டும்.
துணிகளை போலவே மனித மனங்களையும்
சலவை செய்ய ஒரு டிடர்ஜென்ட் கேக் வேண்டும்.
அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும் பட்டியலில்
என் பெயரும் இருக்க வேண்டும்.
அடுத்து வரும் பிறவியிலாவது கம்பனுக்கு
மகளாக பிறக்கும் வரம் வேண்டும்.
ரவி வர்மாவின் ஓவியம் கூட உயிர் பெற்று
என்னுடன் நட்புறவாட வேண்டும்.
கடவுள்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறை
மனிதனாக மாறும் சாபம் பெற்று
மக்களின் துயர் அறிய வேண்டும்.
காதல் என்ற பெயரில் காமத்தை பரப்பும்
இளைஜர்கள் மாறும் நிலை வர வேண்டும்.
இந்த உலகத்தை புரிந்து கொள்ள
இன்னும் ஓர் இதயம் வேண்டும்.
காதலைப் பற்றி தெரிந்து கொள்ள ஓர்
மிகப்பெரிய காதல் தோல்வி வேண்டும்.
ரமணிச்சந்திரனின் நாயகன் உருபெற்று, உயிர்பெற்று
கணவனாக வரும் அற்புத வரம் வேண்டும்.
எந்தன் நிழல் கூட உறுப் பெற்று எனக்கு
தோழியாக வரும் நிலை வரவேண்டும்.
நினைத்தவுடன் மரணம், விரும்பியவுடன் ஜனனம்
கிடைக்கும் உன்னத நிலை வேண்டும்.
அழியாத கல்வியையும், குறையாத செல்வத்தையும்
கொடுக்கும் விலை நிலம் வேண்டும்.
காணி நிலம் வேண்டும் என் பாடிய பாட்டுடைத்
தலைவன் பாரதி எனக்கு குருவாக வரும் வரம் வேண்டும்.
எனது கண்ணீரை மட்டுமல்ல எனது இதயத்தில்
ஏற்பட்ட வலிகளையும் துடைத்தெரிய தூரிகை வேண்டும்.
சிலந்தியின் கூட்டில் சில நாள் சிறையிருக்க
ஜில்லென்ற வரம் ஒன்று வேண்டும்.
பறவையின் கூட்டில் பன்னிரு இரவு
படுத்துறங்க பஞ்சு மெத்தை வேண்டும்.
துன்பம் மொத்தமாக தொடர்ந்து வந்தாலும்
சந்தோசம் தவணை முறையிலாவது கிடைக்கும்
நாள் வர வேண்டும்.
நெஞ்சத்தை கிழித்து இதயத்தை பிடுங்கி
அதன் வலிகளை எந்தன் பட்டு விரல்களால்
தடவி கொடுக்கும் மாபெரும் வரம் வேண்டும்.
இவையனைத்தும் உண்மையாக கிடைக்கும் என்றால்
நான் மீண்டும் ஒரு முறை புதிதாக பிறக்க வேண்டும்.
அபொழுதும் கூட
எந்தன் நட்பே!
உன் இதயக் கோவிலில் நான் குடியிருக்க வேண்டும்.Thursday, April 1, 2010

சின்ன சின்ன ஆசைகள்


எனது சின்ன சின்ன ஆசைகளை இங்கு பதிவு செய்கிறேன். படித்து முடித்து விட்டு அடி பாவி! இதுவா உனக்கு சின்ன சின்ன ஆசைகள் அப்படின்னு
கேட்கக் கூடாது. சரியா?
********

யாருமற்ற உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும்.
அதில் நான் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும்.
பூ, காய், கனி, செடி, கொடி, மரம் இவையனைத்தும்
பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும்.
மான், மயில், குயில், புறா, நாய் இவையனைத்தும்
எனக்கு தோழிகள் ஆக வேண்டும்.
மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும்.
பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும்.
உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும்.
நிலவினை கையில் பிடித்து அதனுடன்
கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும்.
நட்புக்கு இலக்கணம் நான் என்று
என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும்.
சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும்
அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று
தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும்.
பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும்
துடைத்து எடுக்க ஒரு ரப்பர்(அழிப்பான்) வேண்டும்.
எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில்
கடைகளில் கிடைக்கும் நாள் வர வேண்டும்.
நம்பிகைகுரிய நட்புகள் வேண்டும்.
சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும்.
சாக்கடை கலக்காத அரசியல் வேண்டும்.
மரண தேவன் கூட மக்களின் அனுமதி பெற்று
உயிரை எடுக்கும் நிலை வர வேண்டும்.
எப்போது எல்லாம் இந்த உலகம் பிடிக்கவில்லையோ
அப்போது எல்லாம் மீண்டும் தாயின் கருவறை
உள்ளே சென்று படுத்துக் கொள்ளும் உன்னத வரம் வேண்டும்.
தலையணைக் கூட தாய் மடியாக மாற வேண்டும்.
மனிதலோகத்திற்கும் மரணலோகத்திற்கும்
சென்று வர ஒரு நூறடி பாதை வேண்டும்.
மரணலோகம் பிடிக்க வில்லையெனில் மீண்டும்
மனிதனாக வந்து வாழ அற்புத நிலை வேண்டும்.
இவையனைத்தும் உண்மையாக நடக்கும் என்றால்
இன்னொரு பிறவி நான் பிறக்க வேண்டும்.
அப்போதும் கூட எனது நட்புகள் தான்
எந்தன் சுவாசக் காற்றாக இருக்க வேண்டும்..........