Skip to main content

"கௌரவப்பட்டம்"














என் மகளே!
நான் பிறந்தபோது
என் தாய் பெற்ற
பேரானந்தத்தை
என்னையும்
பெற வைத்தாய்.....
கோடானு கோடி
கொட்டிகொடுத்தும்
பல பேருக்கு கிடைக்காத
"அம்மா"
என்ற ஸ்தானத்தை
இந்த அபலையின்
வயிற்றில் அவதரித்து
நீ எனக்கு அளித்தாய்....
ஊரார் பேசும்
"மலடி" என்ற
சொல் அம்புகளிலிருந்து
என்னைக் காத்தருளினாய்....
என் காதல் திருமணத்தில்
பிரிந்த
உன் தாத்தா, பாட்டி,
அத்தை, மாமா, சித்தி
உறவுகளை மீண்டும்
உன் பிறப்பின் மூலம்
மீட்டுக் கொடுத்தாய்...
என் கண்ணே!
நீ பிறந்த போதுதானடி
எப்போதும்
முகம் சுளிக்கும்
அப்பா வீட்டுப் பாட்டியின்
முகத்தில் புன்னகையைக்
காண்கிறேன்...
நீ தத்தித் தத்தி
நடந்து வந்து தாத்தாவை
பொக்கை வாய்
தெரிய சிரிக்க வைத்து
என் மீது கொண்ட
கோபத்தை
தனிய வைத்தாய்.....
என் செல்லமே!
நீ அம்மா என்று
அழைக்கும்
மழலைச் சொல்லை
வேறு மொழியோடு ஒப்பிட
வழி தெரியாமல் தவிக்கிறேன்...
அம்மா என்ற
கௌரவப் பட்டம்
அளித்து
இப்பிறவியை எனக்கு
புனிதப்படுத்திக் கொடுத்தாய்......
உன் பட்டு மேனியை
தொட்டுப் பார்த்து
உள்ளம் சிலிர்த்துப் போனேன்.
அந்த உணர்வுகளை எழுத
மொழித் தெரியாமல்
தவிக்கிறேன்...
உன் மழலை சிரிப்பை
நீ மட்டுமே அறிந்த
உன் மழலை மொழியை
எந்த இசையோடும்
ஒப்பிட முடியாமல்
தோற்றுப் போகிறேன்...
நீ எனக்கு முத்தம்
கொடுக்கும்
தாள சத்தத்தையும்
எச்சிலின் சுவையையும்
வர்ணிக்க
வார்த்தைகளன்றி தவிக்கிறேன்..
என் தங்கமே!
அம்மா என்ற
"கௌரவப்பட்டம்"
கொடுத்த உன்னை
டாக்டராகவோ,
பொறியியல் வல்லுனராகவோ,
கலக்டராகவோ
உருவாக்க
விரும்ப வில்லை....
மனித வடிவில் நடமாடும்
விலங்குக் கூட்டத்திற்கு
மத்தியில்
சிறந்த மனிதனாக
வளர்க்க ஆசைப்படுகிறேன்.........

Comments

  1. தாய்மை உணர்வைதான் எழுதிட வார்த்தைகள் ஏது.....மிகவும் நன்றாக இருக்கிறது !!!
    வாழ்த்துகள் கவிதா !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

வேண்டுமொரு தாய்

களத்து   மேட்டில்   நெல்   அடித்து குளத்து    மேட்டில்   துணி   துவைத்து கட்டு   சோறு   கட்டி   என்னை கல்வி   கற்க   அனுப்பினாய்   அம்மா .... காடு   மேடு   சுற்றி   வந்து காவல்   நீ   எனைக்   காத்து கழனி   சென்று   விறகு   வெட்டி கால்   வயிறு   காஞ்சி   ஊற்றினாய்   அம்மா ..... கட்டியவன்   காப்பாற்ற   வழியற்று கைவிட்டான்   உன்னை கந்து   வட்டி   கடன்   வாங்கி கலெக்டர்   எனை   ஆக்கினாய்    அம்மா ... காடு   சுற்றி   களைத்தவளை முதுகு   தேய   உழைத்தவளை ஊர்   போற்ற   வாழ   வைக்க பிள்ளை   நான்   எண்ணினேன்   அம்மா ... கடைசி   ஒரு   ஆசை   என்று கல்யாணம்   பண்ணி   வைத்தாய் கட்டிய   தாலி   மஞ்சள்   காயுமுன்னே கட்டியவள்   தள்ளி   வைக்க   சொன்னால்   உன்னை ... மனையறம்   தான்  ...

கருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்

அம்மா ! என்   பிறப்பின்   நேரம்   நெருங்கி   விட்டது . அதற்கு   முன்   என்   கடிதத்திற்கு   பதில்   அளித்து   விடு ... கருவில்   என்னை   நீ   சுமந்து   கொண்டு   இருக்கும்   போதே அண்ணல்   காந்தியைப்   பற்றிப்   படித்தாய் . மாமா   நேருவைப்   பற்றி   படித்தாய் . அப்துல்கலாமை   பற்றி   படித்தாய் . நேதாஜி ,  விவேகானந்தன் ,  பகத்   சிங் பற்றியெல்லாம்   படித்தாய் . கல்பனா   சாவ்லா ,  சுனிதா   வில்லியம்ஸ் பற்றியும்   படித்தாய் . ராமாயணம் ,  இதிகாசம் ,  பகவத்   கீதை பற்றிக்கூட   படித்தாய் . தவறு   செய்யும்   மனிதனுக்கு   என்ன தண்டனை   கிடைக்கும்   என்பதற்க்கான நீதிக்   கதைகளையும்   படித்தாய் . பாரத   பூமியைப்   பற்றிப்   படித்தாய் . பக்கத்து   நாடுகளைப்   பற்றியும்   படித்தாய் . இந்தியக்   கலாச்சாரம் ,  குடும்பம் ,  பா...