
வாசலிலே மாவிலை
தோரணம் தொங்க
வாழை மரங்கள்
வாசலை அலங்கரிக்க
மங்கள வாத்தியங்கள்
வீதியுலா வர
மங்கையவள்
தோழியர் புடை சூழ
பட்டு சேலை சரசரக்க
முகமெங்கும் வெட்கம்
புன்னகையாய் ஆட்கொள்ள
மணமகன் அருகில்
மங்கையவள்
நாணமுடன் அமர
மங்கள வாத்தியங்கள் முழங்க
மாப்பிள்ளை
தாலி கட்டும்
வேளையில்
யாரோ தட்டி எழுப்பியதால்
தூக்கம் கலைந்தது...
கனவில் கூட நிறைவேறாத
முதிர் கன்னியின் திருமணம்............
Comments
Post a Comment