
பெண்ணே!
உன் பார்வை வீச்சில்
என் வாழ்நாளை
அற்பனிக்கத்தான்
நினைத்தேன்.
நீ கொஞ்சி பேசும்
பிஞ்சு மொழியில்
என்னை மறந்து
உருகிடத்தான்
நினைத்தேன்...
உன் மல்லிகைப் பூ
புன்னகையில்
மனதை பறிகொடுக்கத்தான்
நினைத்தேன்..
உன் கால் கொலுசின்
ஓசையில் வரும்
சங்கீதத்தில்
நான் கவிதைகள் பாடத்தான்
நினைத்தேன்..
உன் கண்கள்
பேசும் மொழியை
என் இதய சிறைக்குள்
பாதுகாக்கத் தான்
நினைத்தேன்.
உன்னை அடைந்து
என்றும் என் வாழ்க்கையை
பௌர்ணமியாக
மாற்றிக்கொள்ளத்தான்
நினைத்தேன்..
ஆனால்
ஏற்கனவே ஒரு காதல்
"தோல்வியைக்
கற்றுத் தராமல்"
இருந்திருந்தால்.....
l
Comments
Post a Comment