Skip to main content

வேண்டுமொரு தாய்


களத்து மேட்டில் நெல் அடித்து
குளத்து  மேட்டில் துணி துவைத்து
கட்டு சோறு கட்டி என்னை
கல்வி கற்க அனுப்பினாய் அம்மா....

காடு மேடு சுற்றி வந்து
காவல் நீ எனைக் காத்து
கழனி சென்று விறகு வெட்டி
கால் வயிறு காஞ்சி ஊற்றினாய் அம்மா.....

கட்டியவன் காப்பாற்ற வழியற்று
கைவிட்டான் உன்னை
கந்து வட்டி கடன் வாங்கி
கலெக்டர் எனை ஆக்கினாய்  அம்மா...

காடு சுற்றி களைத்தவளை
முதுகு தேய உழைத்தவளை
ஊர் போற்ற வாழ வைக்க
பிள்ளை நான் எண்ணினேன் அம்மா...

கடைசி ஒரு ஆசை என்று
கல்யாணம் பண்ணி வைத்தாய்
கட்டிய தாலி மஞ்சள் காயுமுன்னே
கட்டியவள் தள்ளி வைக்க சொன்னால் உன்னை...

மனையறம் தான் முக்கியமென்று
மனைவி வழி போகச் சொன்னாய்
கலெக்டரே ஆனாலும்
கணவன் என்ற முறையில் வாழச் சொன்னாய்....

பெற்றவளை பிள்ளை பாசத்திற்கு
ஏங்க  வைத்து பிள்ளை நான்
பிரிந்து சென்றேன்
கட்டியவள் வழி நடத்த....

கஞ்சி ஊற்ற நாதியற்று
கல்லறையில் உறங்கிப் போனாய்
கதியற்று போனேன் அம்மா
மதியற்று போனேன்.....

உனை இருக்கும் போது விட்டு விட்டு
கல்லறை போன பின்னே
காலம் கடந்து
புலம்புகிறேன் அம்மா.....

வேண்டுமொரு தாயென்று
காசு கொடுத்து கேட்டாலும்
கண்ணீர்  சிந்தி புலம்பினாலும்
கிடைப்பவளா நீ அம்மா?.....

பத்து தாய்களை தத்து எடுத்து
பரிகாரம் தேடினாலும்
பெற்றவளை தவிக்க விட்ட
பாவம் தான் போகுமா அம்மா ?........

நித்தம் ஒரு முத்தம் கொடுத்து
நித்திரை மறந்தவளை
சத்தமின்றி சாகடித்தேன்
சாத்தான் வழி வந்தவன் நான்......

கட்டிளம் காளைகளை
கண்ணீருடன் வேண்டுகிறேன்
முலைப்பால் ஊட்டியவளுக்கு
கடைசிப் பால் ஊற்றும் வரை....

கல்யாண போதையிலே
காசு பார்க்கும் மமதையிலே
தவிக்க நீ விட்டாய் என்றால்
தண்டிக்கப் படுவாய் அப்பா
தண்டிக்கப்  படுவாய்......

தண்டனை கொடுக்கப் போவது
பெற்றவளும் அல்ல
பெற்றவளை தவிக்க விட்ட   நானுமல்ல
உன் வழி பார்த்து வளரும்
உன் பிள்ளையால்
தண்டிக்கப் படுவாய் அப்பா
தண்டிக்கப்  படுவாய்......


Comments

  1. GUIDE ME TO PUBLISH MY KAVITHAI AND IMPROVE MY WRITING SKILLS

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

கருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்

அம்மா ! என்   பிறப்பின்   நேரம்   நெருங்கி   விட்டது . அதற்கு   முன்   என்   கடிதத்திற்கு   பதில்   அளித்து   விடு ... கருவில்   என்னை   நீ   சுமந்து   கொண்டு   இருக்கும்   போதே அண்ணல்   காந்தியைப்   பற்றிப்   படித்தாய் . மாமா   நேருவைப்   பற்றி   படித்தாய் . அப்துல்கலாமை   பற்றி   படித்தாய் . நேதாஜி ,  விவேகானந்தன் ,  பகத்   சிங் பற்றியெல்லாம்   படித்தாய் . கல்பனா   சாவ்லா ,  சுனிதா   வில்லியம்ஸ் பற்றியும்   படித்தாய் . ராமாயணம் ,  இதிகாசம் ,  பகவத்   கீதை பற்றிக்கூட   படித்தாய் . தவறு   செய்யும்   மனிதனுக்கு   என்ன தண்டனை   கிடைக்கும்   என்பதற்க்கான நீதிக்   கதைகளையும்   படித்தாய் . பாரத   பூமியைப்   பற்றிப்   படித்தாய் . பக்கத்து   நாடுகளைப்   பற்றியும்   படித்தாய் . இந்தியக்   கலாச்சாரம் ,  குடும்பம் ,  பா...