Skip to main content

சின்ன சின்ன ஆசைகள் (2)


ஆழ் கடலின் மேல் நடந்து செல்ல
இரண்டடி பாதை வேண்டும்.
துன்பத்தில் தோல் சாய்ந்து கொள்ள
கணவன் என்ற பெயரில் நண்பன் வேண்டும்.
கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக
நட்பின் கரங்கள் வேண்டும்.
கடந்த கால வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை
திருத்தி வாழ டேப் ரெகார்டரை போலவே
எனக்கும் ஒரு ரீவைன் பட்டன் வேண்டும்.
துணிகளை போலவே மனித மனங்களையும்
சலவை செய்ய ஒரு டிடர்ஜென்ட் கேக் வேண்டும்.
அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும் பட்டியலில்
என் பெயரும் இருக்க வேண்டும்.
அடுத்து வரும் பிறவியிலாவது கம்பனுக்கு
மகளாக பிறக்கும் வரம் வேண்டும்.
ரவி வர்மாவின் ஓவியம் கூட உயிர் பெற்று
என்னுடன் நட்புறவாட வேண்டும்.
கடவுள்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறை
மனிதனாக மாறும் சாபம் பெற்று
மக்களின் துயர் அறிய வேண்டும்.
காதல் என்ற பெயரில் காமத்தை பரப்பும்
இளைஜர்கள் மாறும் நிலை வர வேண்டும்.
இந்த உலகத்தை புரிந்து கொள்ள
இன்னும் ஓர் இதயம் வேண்டும்.
காதலைப் பற்றி தெரிந்து கொள்ள ஓர்
மிகப்பெரிய காதல் தோல்வி வேண்டும்.
ரமணிச்சந்திரனின் நாயகன் உருபெற்று, உயிர்பெற்று
கணவனாக வரும் அற்புத வரம் வேண்டும்.
எந்தன் நிழல் கூட உறுப் பெற்று எனக்கு
தோழியாக வரும் நிலை வரவேண்டும்.
நினைத்தவுடன் மரணம், விரும்பியவுடன் ஜனனம்
கிடைக்கும் உன்னத நிலை வேண்டும்.
அழியாத கல்வியையும், குறையாத செல்வத்தையும்
கொடுக்கும் விலை நிலம் வேண்டும்.
காணி நிலம் வேண்டும் என் பாடிய பாட்டுடைத்
தலைவன் பாரதி எனக்கு குருவாக வரும் வரம் வேண்டும்.
எனது கண்ணீரை மட்டுமல்ல எனது இதயத்தில்
ஏற்பட்ட வலிகளையும் துடைத்தெரிய தூரிகை வேண்டும்.
சிலந்தியின் கூட்டில் சில நாள் சிறையிருக்க
ஜில்லென்ற வரம் ஒன்று வேண்டும்.
பறவையின் கூட்டில் பன்னிரு இரவு
படுத்துறங்க பஞ்சு மெத்தை வேண்டும்.
துன்பம் மொத்தமாக தொடர்ந்து வந்தாலும்
சந்தோசம் தவணை முறையிலாவது கிடைக்கும்
நாள் வர வேண்டும்.
நெஞ்சத்தை கிழித்து இதயத்தை பிடுங்கி
அதன் வலிகளை எந்தன் பட்டு விரல்களால்
தடவி கொடுக்கும் மாபெரும் வரம் வேண்டும்.
இவையனைத்தும் உண்மையாக கிடைக்கும் என்றால்
நான் மீண்டும் ஒரு முறை புதிதாக பிறக்க வேண்டும்.
அபொழுதும் கூட
எந்தன் நட்பே!
உன் இதயக் கோவிலில் நான் குடியிருக்க வேண்டும்.



Comments

Popular posts from this blog

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

வேண்டுமொரு தாய்

களத்து   மேட்டில்   நெல்   அடித்து குளத்து    மேட்டில்   துணி   துவைத்து கட்டு   சோறு   கட்டி   என்னை கல்வி   கற்க   அனுப்பினாய்   அம்மா .... காடு   மேடு   சுற்றி   வந்து காவல்   நீ   எனைக்   காத்து கழனி   சென்று   விறகு   வெட்டி கால்   வயிறு   காஞ்சி   ஊற்றினாய்   அம்மா ..... கட்டியவன்   காப்பாற்ற   வழியற்று கைவிட்டான்   உன்னை கந்து   வட்டி   கடன்   வாங்கி கலெக்டர்   எனை   ஆக்கினாய்    அம்மா ... காடு   சுற்றி   களைத்தவளை முதுகு   தேய   உழைத்தவளை ஊர்   போற்ற   வாழ   வைக்க பிள்ளை   நான்   எண்ணினேன்   அம்மா ... கடைசி   ஒரு   ஆசை   என்று கல்யாணம்   பண்ணி   வைத்தாய் கட்டிய   தாலி   மஞ்சள்   காயுமுன்னே கட்டியவள்   தள்ளி   வைக்க   சொன்னால்   உன்னை ... மனையறம்   தான்  ...

கருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்

அம்மா ! என்   பிறப்பின்   நேரம்   நெருங்கி   விட்டது . அதற்கு   முன்   என்   கடிதத்திற்கு   பதில்   அளித்து   விடு ... கருவில்   என்னை   நீ   சுமந்து   கொண்டு   இருக்கும்   போதே அண்ணல்   காந்தியைப்   பற்றிப்   படித்தாய் . மாமா   நேருவைப்   பற்றி   படித்தாய் . அப்துல்கலாமை   பற்றி   படித்தாய் . நேதாஜி ,  விவேகானந்தன் ,  பகத்   சிங் பற்றியெல்லாம்   படித்தாய் . கல்பனா   சாவ்லா ,  சுனிதா   வில்லியம்ஸ் பற்றியும்   படித்தாய் . ராமாயணம் ,  இதிகாசம் ,  பகவத்   கீதை பற்றிக்கூட   படித்தாய் . தவறு   செய்யும்   மனிதனுக்கு   என்ன தண்டனை   கிடைக்கும்   என்பதற்க்கான நீதிக்   கதைகளையும்   படித்தாய் . பாரத   பூமியைப்   பற்றிப்   படித்தாய் . பக்கத்து   நாடுகளைப்   பற்றியும்   படித்தாய் . இந்தியக்   கலாச்சாரம் ,  குடும்பம் ,  பா...