Skip to main content

"என் தேசத்தை காணவில்லை"



ஏ உலக மக்களே !!!
இங்கு என் தேசத்தை காணவில்லை
யாரேனும் கண்டீர்களா?
இந்தியா என்றொரு புண்ணிய பூமி இருந்தது
யாரேனும் கண்டீர்களா?
என் தேசத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும்
உயர்ந்த ஒழுக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்
யாரேனும் கண்டீர்களா?
கூட்டுக் குடும்பமாய் குருவி கூடுகளைப்
போல வாழ்ந்து வரும்
என் தேச மக்களை எங்கேனும் கண்டீர்களா?
என் தேசத்தில் ஒரு மாநில மக்களுக்கு துன்பம்
என்றால் இன்னொரு மாநிலத்தவர்
உயிரையும் கொடுப்பார்களே
கண்டீர்களா என் தேச மக்களை?
பல நாட்டு மக்களும் என் நாட்டு
கலாச்சாரத்தை பார்த்து
வியந்து கொண்டு இருப்பார்களே
கண்டீர்களா அவர்களை?
என் கொள்ளு பாட்டன் காந்தியும்
என் மாமா நேருவும் வாழ்ந்த
என் புண்ணிய தேசத்தை கண்டீர்களா?
என் பாட்டன் மார்கள் ரத்தம் சிந்தி
சுதந்திரம் வாங்கிய என்
புண்ணிய பூமியை கண்டீர்களா?
என் தாய் மார்கள் என் தாய் மக்களுக்கு
வீரப் பால் ஊட்டி வளர்த்தார்களே
அப்படிப் பட்ட என் வீர பூமியை கண்டீர்களா?
சகோதர பாசத்தில் சாணக்கியனை
தோற்கடிக்கும் என் தேச சிங்கங்களை
பார்த்தீர்களா?
ஏ மூடனே!!!
அதோ உன் தேசம்!!
காமத்திற்காக பெற்ற மகளின் கற்பை
சூறையாடும் காமுகர்கள் நிறைந்த
உன் புண்ணிய தேசத்தை பார்!!!
தண்ணீருக்காக உன் மாநில மக்கள்
அடித்துக் கொள்ளும் அவலத்தை பார்!!!
கள்ளக் காதலுக்காக கட்டிய கணவனை
கொலை செய்யும் பெண்கள் நிறைந்த
உன் தேசத்தை பார்!!!
அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படும்
உன் குல வீர புருஷர்களைப் பார்!!!
தீவிரவாதம் என்ற பெயரில்
உன் தேசத்தை கூறு போடும்
உன் அன்னை பூமியை பார்!!!
அமைதிப் பூங்காவான உன் தேசம்
இப்பொழுது அமைதி இழந்து
தவிக்கும் அவலத்தைப் பார்!!!
பெற்ற தாய் தந்தையர்களை அனாதையாக
தவிக்க விடும் உன் தேச புருஷர்களை பார்!!!
வீதிக்கொரு கொலையும் ஜாதிக்கொரு கொலையும்
நடக்கும் உன் இந்திய தேசத்தை பார்!!!
அடுப்புடன் சேர்ந்து மனித உயிர்களும்
எரிந்து கொண்டிருக்கும் கொடுமையைப் பார்!!!
உன் அன்னை பூமியின் நெஞ்சிற்கு
தினம் ரத்தத்தை அருவியாக்கும்
உன் சொர்க்க பூமியை பார்!!!
அரசியல் என்ற பெயரில் உன் தேசத்தை
சுரண்டும் அரசியல்வாதிகளைப் பார்!!!
காமத்திற்காக உன் நாட்டு பெண்கள்
சீரழிக்கப் படும் அவலத்தைப் பார்!!!
ஐயோ!!! ஐயோ!!! ஐயோ!!!
இதுவா ஏன் தேசம்!!?!!
கண்ணீரையும் ரத்தத்தையும் சிந்தி
சுதந்திரம் வாங்கிய இதுவா ஏன் தேசம்!?!
என் அன்னை பூமியா இப்படி
களங்கப் பட்டு நிற்ப்பது!!?!!
என் வீர இளைஞர்கள் பகத்சிங்கும்,
நேதாஜியும், விவேகனந்தனும்
வாழ்ந்த என் அன்னை பூமியா இது!!?!!
ஏ பைத்தியமே !
இன்று வந்து உன் தேசத்தைத்
தேடும் நீ யார்?
என் தேசத்தின் மூசுக் காற்றை சுவாசிக்க
வந்த ஓர் இந்தியக் குழந்தை.
ஏ தோழனே!
இன்று என் தேசத்தை கடந்து
செல்லும் நீ யார்?
ஆ.. நானா?
என் முனோர்கள் சொன்னார்கள்
உன் தேசத்தைப் பற்றி.
ஒரு ஜென்மம் இங்கு வாழ்ந்து விட்டு
செல்ல வந்தேன்.
ஆனால் இங்கு உன் தேசத் தாய்
கேட்பாரற்று சிதைந்து கொண்டு
இருக்கிறாள்.
ஆகவே மீண்டும் என் தேசம் போகிறேன்
மறு ஜென்மம் எடுக்க!!!
ஏ இந்திய பதர்களே!
கேட்டீர்களா!?!கேட்டீர்களா!?!கேட்டீர்களா!!
என் தேசத்தின் அவல நிலையைப்
பற்றி கேட்டீர்களா?
வாழ்க்கையை செம்மைப் படுத்த
வள்ளுவன் எழுதிய திருக்குறளை படித்த
என் தேசத்தின் அவலத்தைப் பார்த்தீரா?
ஓ பாரதத் தாயே!!!
எங்ஙனம் தாங்குகிறாய்? எப்படி தாங்குகிறாய்?
ஏ மகாத்மாவே!
எடுத்து வா இன்னொரு ஜென்மம்.
ஏ நேதாஜியே!
எழுந்து வா கல்லறையை விட்டு.
அம்மாவின் கருவில் தூங்கும்
என் இளவல்களே!
குதித்து வாருங்கள்...
மீண்டும் ஒரு யுத்தம் நடத்த வேண்டும்.
ஆம் !!! நம் அன்னை பூமியின் கண்ணீரைத்
துடைக்க நாம் யுத்தம் நடத்த வேண்டும்.
வைரமுத்து கேட்டதுப் போல் இந்த பூமியை
சலவை செய்ய வேண்டும்!!
சலவை செய்ய வேண்டும்!! சலவை செய்ய வேண்டும்!!
வாருங்கள் இந்தியாவை தூக்கி நிறுத்த..................!!!!

Comments

Popular posts from this blog

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

வேண்டுமொரு தாய்

களத்து   மேட்டில்   நெல்   அடித்து குளத்து    மேட்டில்   துணி   துவைத்து கட்டு   சோறு   கட்டி   என்னை கல்வி   கற்க   அனுப்பினாய்   அம்மா .... காடு   மேடு   சுற்றி   வந்து காவல்   நீ   எனைக்   காத்து கழனி   சென்று   விறகு   வெட்டி கால்   வயிறு   காஞ்சி   ஊற்றினாய்   அம்மா ..... கட்டியவன்   காப்பாற்ற   வழியற்று கைவிட்டான்   உன்னை கந்து   வட்டி   கடன்   வாங்கி கலெக்டர்   எனை   ஆக்கினாய்    அம்மா ... காடு   சுற்றி   களைத்தவளை முதுகு   தேய   உழைத்தவளை ஊர்   போற்ற   வாழ   வைக்க பிள்ளை   நான்   எண்ணினேன்   அம்மா ... கடைசி   ஒரு   ஆசை   என்று கல்யாணம்   பண்ணி   வைத்தாய் கட்டிய   தாலி   மஞ்சள்   காயுமுன்னே கட்டியவள்   தள்ளி   வைக்க   சொன்னால்   உன்னை ... மனையறம்   தான்  ...

கருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்

அம்மா ! என்   பிறப்பின்   நேரம்   நெருங்கி   விட்டது . அதற்கு   முன்   என்   கடிதத்திற்கு   பதில்   அளித்து   விடு ... கருவில்   என்னை   நீ   சுமந்து   கொண்டு   இருக்கும்   போதே அண்ணல்   காந்தியைப்   பற்றிப்   படித்தாய் . மாமா   நேருவைப்   பற்றி   படித்தாய் . அப்துல்கலாமை   பற்றி   படித்தாய் . நேதாஜி ,  விவேகானந்தன் ,  பகத்   சிங் பற்றியெல்லாம்   படித்தாய் . கல்பனா   சாவ்லா ,  சுனிதா   வில்லியம்ஸ் பற்றியும்   படித்தாய் . ராமாயணம் ,  இதிகாசம் ,  பகவத்   கீதை பற்றிக்கூட   படித்தாய் . தவறு   செய்யும்   மனிதனுக்கு   என்ன தண்டனை   கிடைக்கும்   என்பதற்க்கான நீதிக்   கதைகளையும்   படித்தாய் . பாரத   பூமியைப்   பற்றிப்   படித்தாய் . பக்கத்து   நாடுகளைப்   பற்றியும்   படித்தாய் . இந்தியக்   கலாச்சாரம் ,  குடும்பம் ,  பா...