Skip to main content

"இறுதிவரை உன்னோடு"


மணக்கோலத்தில் அமர்ந்து இருந்தான் விஜய். "முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு, பொண்ண அழச்சிட்டு வாங்கோ" என்ற ஐயரின் குரல் கேட்டு மணப்பெண்ணை அழைக்க தோழிகள் விரைந்தனர்.

குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்தாள் திவ்யா. மனப் பெண்ணுக்கே உரிய வெட்கம், புன்னகை அனைத்தும் முகத்தில் சூழ்ந்து கொள்ள மெல்ல நடந்து வந்து மாலை சூடும் மன்னவன் அருகில் அமர்ந்தாள். மங்கள வாத்தியம் முழங்கவே இனிதே நடைபெற்றது திருமணம்.

தாழ்ப்பாள் விலகும் ஓசை கேட்கவே, திரும்பி பார்த்தான் விஜய். திவ்யா வெட்கமுடன் அவனை நோக்கி வந்து கொண்டு இருந்தாள். பால் சொம்பை மேஜையின் மீது வைத்து விட்டு அவன் காலில் விழுந்து வணங்கினாள். "நல்லாயிரு" என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கூறி விட்டு அவளை தொட்டு தூக்காமல் அப்படியே அமர்ந்து இருந்தான்.

அவளாகவே எழுந்து கட்டிலின் மேல் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள். நாம கொஞ்சம் பேசலாமா? என்று விஜய் தான் முதலில் ஆரம்பித்தான்.

ஓ! பேசலாமே. என்ன பேசலாம் என்று ஆர்வமுடன் கேட்டாள்.

நீ B.Com., முடிச்சி இருக்க இல்லியா! காலேஜ்ல படிக்கும் போது எத்தனை பேர லவ் பண்ண? இல்ல, எத்தன பேருக்கு லவ் லெட்டர் கொடுத்த... எத்தன பேர் உன்ன லவ் பண்ணாங்க? உனக்கு யார் யார் எல்லாம் லவ் லெட்டர் கொடுத்தாங்க..எல்லாத்தையும் வெட்கப் படாத சொல்லிடுமா?

இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத திவ்யாவிற்கு கோபத்தில் கண்கள் சிவந்து கொண்டு வந்தது. இவன் விளையாட்டாக கேட்கிறானா? அல்லது உண்மையாக கேட்கிறானா? என்று புரியாமல் மனதிற்குள் நொந்து கொண்டாள். இருப்பினும் கோபத்தை அடக்கி கொண்டு பொறுமையாக பதில் கூறினாள்.

இல்லைங்க காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். என் தோழிகள் எல்லாம் காதல் என்கிற வலையில மாட்டி படாத பாடு பட்டு இருக்காங்க. அதனால காதல் மேல எனக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது இல்ல. அதனால் அந்த வலையில நான் சிக்கல.

இங்க பார் திவ்யா! சும்மா டூப் விடாத. காலேஜ் அஹ கிராஸ் பண்ணிட்டு வர யாரா இருந்தாலும் லவ் பண்ணாம வர மாட்டாங்க. கொட்சையா சொல்லனும்னா "கெட்டுப் போகாம வர மாட்டாங்க" .

கடவுளே.. இவன் நல்லவனா? கெட்டவனா? இறைவா! திருமணம் சொர்க்கத்துல நிச்சயிக்கப் படுதுன்னு சொல்வாங்க. நீ என் திருமணத்த நரகத்துல நிச்சயம் பண்ணிட்டியா? வாழ்க்கையில் முதல் முறையாக அருவருப்பான வார்த்தைகளை காதில் கேட்டாள். அதுவும் தாலி கட்டிய கணவன் வாய்மொழி மூலம்.

என்னமா? மௌனம் சம்மதத்துக்கு அறிகுறின்னு சொல்வாங்க. அப்போ உண்மை தான நான் உன்ன பத்தி கேட்டது எல்லாம்.

இங்க பாருங்க! என்ன பத்தி தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க. இந்த மாடர்ன் உலகத்துல பொண்ணுங்க கல்யாணத்துக்கு முன்னாடி கெட்டுப் போய் தான் இருப்பாங்க அப்படின்னு ரொம்ப ரொம்ப தப்பா புரிஞ்சி இருக்கீங்க.. இந்த நவ நாகரிக உலகத்துலயும் பல கண்ணகிகள் இன்னும் ஒழுக்கமாதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. நானும் ஒரு கண்ணகி தான்.

நான் உன்ன கண்ணகி, மாதவி கதை எல்லாம் கேட்கல. நீ கெட்டு போனியா? இல்லையா? அத சொல்லு முதல்ல !

நான் இந்த நேரத்துல என்ன பத்தி எது சொன்னாலும் அது உங்களுக்கு தப்பதான் படும். ஆனா ஒன்னு மட்டும் நான் உறுதியா சொல்வேன். "நான் கறந்த பால விட சுத்தமாணவ".

அப்போ நீ என்கிட்டே உண்மைய சொல்லப் போற வரைக்கும் உனக்கும் எனக்கும் எந்தவித உறவும் இருக்கப் போறது இல்ல. என்று கடும் சொற்களால் தாக்கி விட்டு வேறு அறைக்கு சென்று விட்டான்.

கடவுளே! நீ எனக்கு கொடுத்த வரம் இதுதானா? எதுக்கு விஜய் காரணம் இல்லாமல் சந்தேகப்படுகிறான். நான் உண்மையாணவ தான்னு எப்போ புரிந்து கொள்ளப் போகிறான் என்று கூறி வாய் விட்டே அழுது விட்டாள் வாழ்க்கையில் அழுதே பழக்கம் இல்லாத அபலைபெண்.

மறுநாள் காலை.

திவ்யா! காபி எடுத்துட்டு வாம்மா! என்று கேட்டுக்கொண்டே சமையல் அறைக்கு வந்தான் விஜய். காபி கொடுத்ததும் வாங்கி குடித்து விட்டு மாடிக்கு சென்று விட்டான். மறுபடியும் காலை உணவிற்காக கிழே இறங்கி வந்தான்.

திவ்யா! ஒரு சப்பாத்தி வை போதும். கொஞ்சமா குருமா போடு என்று கெட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு மறுபடியும் மாடிக்கு சென்று விட்டான்.

திவ்யாவிற்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது! இரவு மட்டும் ஏன் இவ்வாறு நடந்து கொண்டான். ஒரு வேலை இப்போது நடப்பது கனவா? காரணம் புரியாமல் குழம்பினாள். ஒரே இரவில் இவ்வளவு மாற்றம் ஏற்படக் கூடுமா என்ன? அவளால் நடந்ததை நம்ப முடிய வில்லை.

வேலையை எல்லாம் முடித்து விட்டு இரவு படுக்க சென்றாள் திவ்யா.

திவ்யா! நான் காலையில அப்படி நடந்துகிட்டது உனக்கு ஒரே சந்தோசமா இருந்து இருக்குமே. நான் உன்ன சந்தோஷ படுத்த அப்படி நடந்துக்கல. என்னுடைய அப்பா, அம்மாவ சந்தோசப் படுத்த தான் அப்படி நடந்துக் கிட்டேன். உன்கூட சந்தோசமா இருப்பேன்னு கனவிலும் நினைக்காத! என்று கூறி வேறு அறை நோக்கி நடந்தான்.

அபோழுதுதான் அவளுக்கு புரிந்தது. பகல் வேஷமும் இரவு வேஷமும் மாறி மாறி போடுகிறான் என்று. நீ எதுவரை போகிறாயோ அதுவரை நானும் வர தயார் என்று மனதிலே சவால் விட்டுக்கொண்டு படுத்தாள்.

இன்று வெள்ளிக்கிழமை.

விஜய்! திவ்யாவ கூட்டிட்டு கோவிலுக்குப் போயிட்டு வாப்பா என்று அவன் தாய் கற்பகம் கூறினாள்.

திவ்யா சீக்கரம் கிளம்பி வாமா. மணி ஆகுது என்று கூறிக் கொண்டே மாடிக்கு சென்று அவள் கையை பிடித்து அழைத்து வந்தான். பகல் வேஷம் போட தொடங்கி விட்டான். அவனுக்கு ஏற்ற மாதிரி அவளும் நடிக்க வேண்டி இருந்தது.

அழைத்துக் கொண்டுப் போய் கோவிலின் வாசலில் விட்டு விட்டு, போய் சாமி தரிசனம் முடிச்சிட்டு ஒரு மணி நேரத்துல வந்துடு, நான் என் நண்பன் ஒருவனை பார்க்க போறேன் என்று கோபம் குறையாத குரலில் கூறி விட்டு சென்று விட்டான்.

சாமி தரிசனம் கால் மணி நேரத்துக்குள் முடிந்து போனது. இருப்பினும் விஜய் வந்தாக வேண்டுமே. அவன் வருவதற்குள் தான் வீடு சென்றால் அதுக்கும் ஏதாவது கதை கட்டுவான் என்று நினைத்துக் கொண்டே கோவிலின் ஒரு ஓரமாக அமர்ந்து, அங்கிருந்த தூணில் தலையை சாய்த்துக் கொண்டாள்.

தன் குறையை யாரிடம் சொல்லி ஆறுதல் பெறுவது என்று மனதிற்குள் நொந்து போனாள். மாமியாரிடம் கூறினாள் தன் மகன் பேச்சைக் கெட்டு அவளும் சந்தேகப் படக்கூடும்.தன் பெற்றோரிடம் கூறவும் பயந்தாள். ஏன் எனில் தந்தை ஏற்கனவே இதய நோயாளி. இந்நேரத்தில் இதைகூறினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை அறிந்து மனதிற்குள்ளாக போராட்டம் நடத்தினாள்.

ஒரே பெண். செல்லமாக வளர்த்ததால் துன்பம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தாள். ஒரு சமயம் துன்பத்தையும் சேர்த்து கற்றுக் கொடுத்து இருந்தால் இப்பொழுது எளிதாக இருந்திருக்குமோ?

மொவ்னத்தைக் கலைத்தாள். அவன் சொன்ன ஒரு மணி நேரம் வந்தாகி இருந்தது. முகத்தில் கண்ணீர் கோடுகளாய் பாதை அமைத்து இருந்தது. கன்னத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள். அப்பொழுதுதான் விஜய் வந்து கொண்டு இருந்தான்.

அவன் முகத்திலும் கவலை ரேகை அப்பி இருந்தது. சீக்கரம் வா. வந்து பைக்ல உட்கார். அதே கோபம் குறையாத குரல். ஏறி அமர்ந்து கொண்டாள். நெருக்கத்தில் அமர்ந்து இருந்ததால் அவன் உடல் வெப்பத்தை விட மிக அதிகமா கொதித்து.

வீட்டிற்கு வந்ததும் மேலே சென்று படுத்து விட்டான். வீட்டில் இருந்த காய்ச்சல் மாத்திரை ஒன்றை எடுத்துக்கொண்டு தண்ணிருடன் மேலே சென்றால் திவ்யா. இந்தாங்க விஜய்! இந்த மாத்திரைய சாப்பிடுங்க. என்று நீட்டினாள்.

அவன் ஏதோ சொல்ல வாயைத் திறந்தான். நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு எனக்கு தெரியும். உங்க நடிப்புக்கு ஈடுக் கொடுத்து நானும் நடிச்சா தான் பார்கிறவங்களுக்கு சந்தேகம் வராது விஜய். உங்கள மாதிரியே நானும் நடிக்க கத்துக்கறனே! என்று கூறி விட்டு கிழே வந்தாள்.

நாட்கள் நகர்ந்து கொண்டுதான் இருந்தன துன்பத்துடனும் துயரத்துடனும்.

விஜயின் பெற்றோர் தன் மகள் அனிதாவை பார்க்க ஈரோடு கிளம்பினர். வருவதற்கு இரண்டு, மூன்று வாரங்கள் ஆகலாம் என்று விஜய், திவ்யாவிடம் கூறி விடைப் பெற்றனர்.

இன்று.....

ஆபீஸ் முடிந்து மாலை வீட்டிற்கு வந்தான் விஜய். வந்து அமர்ந்து அறை மணி நேரம் ஓடி இருக்கும். விஜயின் நண்பன் சுரேஷ் அவனைப் பார்க்க வந்தான். நண்பனை பார்த்து சொல்ல முடியாத மகிழ்ச்சி அவன் முகத்தில்.

டேய் சுரேஷ்! வாடா. எப்படி இருக்க? வரேன்னு ஒரு வார்த்தைக் கூட சொல்லல.

நல்லா இருக்கேன் டா. இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன். அப்படியே உன்ன பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் டா. அதுவும் இல்லாம முன்கூட்டியே தகவல் கொடுத்தா எனக்கு ஒரு காபி கொடுக்க பயந்துகொண்டு குடும்பத்தோட எஸ்கேப் ஆகி இருப்ப. அதான் சொல்லாம வந்தேன்..

உனக்கு இன்னும் இந்த நக்கல் போகல பார்த்தியா?

சும்மா சொன்னேன் டா. எப்படி டா இருக்க புது மாப்ளை?
எப்படி இருக்க என்று கேட்டதுக்கு பதில் கூறாமல், இருடா உனக்கு காபி எடுத்துட்டு வரேன் என்று உள்ளே சென்று காபி யுடன் திரும்பினான்.

டேய்! உன் மனைவி எங்கடா. நீ செய்யுற இந்த வேலை எல்லாம்.

அவள் துணி துவைக்கறாடா. அதான் தொந்தரவு பண்ண வேண்டாம்னு நான் கொண்டு வந்தேன்.

உன் மனைவி கொடுத்து வச்சவடா மச்சான். சரி உனக்கு என்ன பிரச்சனை. உன் முகமும் உடம்பும் வாடி போய் இருக்கு. கல்யாணம் ஆன புது மாபிள்ளை மாதிரியே தெரியலையே உன்ன பார்த்தா? ரெண்டு பொண்டாட்டிய கல்யாணம் பண்ணவன் கூட சந்தோசமா இருக்கான் டா. நீ ஏன் டா இப்படி இருக்க?

சுரேஷால் கேள்விகளை எளிதாக கேட்க முடிந்தது. ஆனால் அதற்க்கான பதிலை விஜயால் அவ்வளவு எளிதாக கூற முடிய வில்லை. விஜய்க்கு கண்கள் கலங்கியது.
டேய் நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனாடா? என்று விஜயின் கண்களின் கண்ணீரைக் கண்டதும் பதறிப் போய்க் கேட்டான் சுரேஷ்.

டேய் மச்சான். நீ மொட்ட மாடிக்கு வாடா. இங்க எதுவும் பேச வேண்டாம். அங்க வா எல்லாத்தையும் சொல்றேன் என்று சுரேஷை அழைத்துச் சென்றான் விஜய்.

என்னடா! என்னமோ பேசனும்னு கூட்டிட்டு வந்துட்டு பேசாம இருக்க? உன்ன பார்த்த நீ நிம்மதியா தூங்கி பல நாள் ஆன மாதிரி தெரியுது. ஆண்கள் அழுவுறதே கோழைத்தனம்னு சொல்ற உன் கண்கள இன்னைக்கு நான் கண்ணீரைப் பார்க்கறேண்டா! சொல்லுடா என்னடா உன் பிரச்சனை?

டேய் மச்சான். யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்த உன் கிட்ட சொல்ல போறேன் டா. என் மனசுக்குள்ள போட்டு பூட்டி வச்சிருக்குற அந்த கொடுமைய சொல்றேன் கேளுடா!

என்னடா சொல்ற! சீக்கரம் சொல்லு. இல்லாட்டி என் மண்டை வெடிச்சிடும்.

சொல்றேண்டா. என் வாழக்கைய புரட்டி போட்ட அந்த பயங்கரமான செய்திய உங்கிட்டதாண்டா சொல்லப் போறேன். கண்களில் கண்ணீர் கோடுகள்.
இதுவரைக்கும் எனக்கும் அனிதாவுக்கும் முதல் இரவே நடக்கலடா!

வாட்? என்னடா சொல்ற? உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனையா? இல்ல வேண்டுதல் ஏதாவது இருக்கா? இல்ல திவ்யாகிட்ட ஏதாவது பிரச்சனையா?
பிரச்சனை அவகிட்ட இல்லடா. எனக்குத்தாண்டா பிரச்சனை. அத நான் எப்படிடா என் வாயால சொல்றது.

சொல்லு விஜய். சொன்னாதானே உன் மனசுல இருக்குற பிரச்சனை என்னான்னு தெரியும்?

எனக்கும் திவ்யாக்கும் முதல் இரவே நடக்காம இருக்குறதுக்கு என்ன காரணம் தெரியுமா?
"என்ன காராணம்?"
எனக்கு "எயிட்ஸ்" இருக்குடா. சொல்லிவிட்டு வாய்விட்டு அழுதான். இத்தனை நாள் மனதுக்குள் இருந்த துக்கம் எல்லாம் கண்ணீராய் வெளிவந்து கொண்டு இருந்தது விஜயிடம்....

டேய்! என்ன... என்னடா சொல்ற நீ? உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நீ தப்பு எதுவும் பண்ணி இருக்க மாட்ட. இருந்தாலும்........

சொல்றேண்டா! முதல்ல நீ என் மேல வச்சி இருக்குற நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி டா. என்ன பத்தி எனக்கு நல்லா தெரியும் டா. நான் எந்த நிலையுளையும் தடம் மாறி போனது இல்ல.

ஹ்ம்ம்ம்ம்ம்

எனக்கு எய்ட்ஸ் இருக்குன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சாலும் பரவாயில்ல டா.

கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே காய்ச்சல் விட்டு விட்டு வந்தது. உடல் ரொம்ப சோர்வா இருக்குற மாதிரி பீல் பண்ணேன் டா. தலை சுத்தல் வேற அடிக்கடி. கல்யாண அலைச்சலா இருக்கும்னு நினச்சேன் டா. எதுக்கும் இருக்கட்டும்னு கல்யாணம் முடிஞ்சு மாலை டாக்டர் கிட்ட போய் ஒரு செக்அப் பண்ணிக்கலாம்னு போனேன் டா.

ஹ்ம்ம்ம்ம்ம்

டாக்டர்கிட்ட காரணத்தை சொல்லி கல்யாணம் முடிந்ததையும் சொன்னேன் டா. அப்பவே டாக்டர் முகத்தில் ஒரு கலவரம். ரத்தம் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு, நாங்க சொல்றவரைக்கும் நீங்க உங்க மனைவி கூட இல்லற வாழ்வில் ஈடுபடாமல் இருப்பது நல்லது அப்படின்னு சொன்னார்.

ஹ்ம்ம்ம்ம்ம்

நான் என்னவா இருக்கும்னு நினைக்குறிங்க டாக்டர்? அப்படின்னு கேட்டேன் டா. சொல்ல கஷ்டமா இருக்கு விஜய். இருந்தாலும் வேற வழி இல்ல. உங்களுக்கு "எய்ட்ஸ்" இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு அப்படின்னு சொன்னார் டா.

நான் அப்பவே அவர்கிட்ட பயங்கரமா சத்தம் போட்டேன் டா. நான் அப்படிப் பட்ட பையன் கிடையாது. நான் இது வரைக்கும் எந்த பொண்ணு கிட்டவும் தப்பா நடந்து கிட்டது கிடையாது. எங்க வீட்ல யாருக்கும் எய்ட்ஸ் இல்ல. அப்படி இருக்கும்போது எனக்கு எப்படி எய்ட்ஸ் இருக்கும். எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்காதிங்க டாக்டர் அப்படின்னு சொன்னேன் டா.

ஹ்ம்ம்ம்ம்ம்ம்

நான் செக் பன்னி சொல்றேன் விஜய். எங்க அனுபவத்துல நான் சொன்னேன். ரிப்போர்ட் எப்படி வருதுன்னு பார்க்கலாம். ரெண்டு நாள் கழிச்சி வாங்க சரியா? நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும் என்றார்.

ஹ்ம்ம்ம்ம்ம்

அன்னைக்கு திவ்யாவ கோவில விட்டுட்டு நான் ரிசல்ட் வாங்க போனேன் டா. அப்போ தான் எய்ட்ஸ் இருக்குன்னு உறுதியா சொன்னார்டா.

நான் எவ்வளவு கண்ணியமா வாழறேன்னு டாக்டர்க்கு புரிய வச்சேன் டா. அதுக்கு டாக்டர் சிறிது யோசிச்சு, நீங்க வெளியில ரோடு சைடு கடையில ஏதாவது வாங்கி சாப்பிடற பழக்கம் இருக்கா? அப்படின்னு கேட்டார்.

நான் எனக்கு எய்ட்ஸ் வந்ததுக்கும் ரோடு சைடு கடையில வாங்கி சாப்பிடறதுக்கும் என்ன சம்மந்தம் டாக்டர். தேவ இல்லாம இந்த கேள்விய ஏன் டாக்டர் கேட்குறிங்க?

சம்பந்தம் இருக்கு விஜய். நீங்க கேள்வி பட்டது இல்லையா? ரோடு சைடு கடையில "பாணிபுரி" வாங்கி சாப்பிட ஒரு சிறுவனுக்கு எய்ட்ஸ் வந்து இருக்குனா நீங்க நம்புவிங்களா?

விஜய் அதிர்ந்தான் டாக்டர் சொன்ன பதிலை கேட்டு.

ரோடு சைடு கடையில போட்ட வடைய வாங்கி சாப்பிட்ட மற்றொரு சிறுவனுக்கு எய்ட்ஸ் வந்து இருக்குனா நீ நம்புவியா?

டாக்டர் சொல்ல சொல்ல விஜய்க்கு பயம் தொண்டையை கவ்வியது. இருந்தும் புரியல டாக்டர் என்றான்.

பாணிபுரி வித்தவனுக்கும் வடை சுட்டு வித்தவனுக்கும் எய்ட்ஸ் இருந்து இருக்கு. பாணிபுரில வெங்காயம் வெட்டி தூவவும் போது அவனோட கை கட் ஆகி, அதுல இருந்து வந்த ரத்தம் பாணிபுரில பட்டு இருக்கு. அத உடனே வாங்கி சாப்பிட்ட அந்த பையனுக்கு வாய்க்குள்ள இருந்த புண் வழியா எய்ட்ஸ் கிருமி உள்ள போய் இருக்கு. இதனால அவனையும் எய்ட்ஸ் தாக்கி இருக்கு.

டாக்டர் என்னால நம்ப முடியல.

ஆனாலும் இதுதான் உண்மை. அதனாலதான் நான் உங்கள கேட்டேன்.

அப்பொழுது தான் சிந்திச்சேன் டா. நான் ரெகுலரா ஒரு கடையில ஆபீஸ் விட்டு வரும்போது பாணிபுரி சாப்பிடுவேன் டா. எனக்கு உடனே அவன் மேல சந்தேகம் வந்துச்சு டா. அவனை தேடி கண்டு பிடிச்சி டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனேன். டாக்டர் அவனை பார்த்த உடனே, இவருக்கு எய்ட்ஸ் இருக்குன்னு எங்க மருத்துவமனையில தான் உறுதி செஞ்சி இருக்கிறோம்.
நான் அவன மிரட்டிக் கேட்டேன். என்னைக்காவது எனக்கு பாணிபுரி கொடுக்கும்போது உன் கைய கட் பண்ணி இருக்கியான்னு கேட்டேன்டா. அவன் இல்லன்னு சொன்னான். மிரட்டி கேட்டதுக்கு தெரியாம விரல கட் பண்ணிகல... தெரிஞ்சு தான் கட் பண்ணி லைட் அஹ ரத்தத்தை தெளிச்சு கொடுத்தேன்னு சொன்னான் டா.
விஜய் சொன்னதைக் கேட்டு சுரேஷ்க்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. ஏன் அப்படி பண்ணான்.
இந்த உலகத்துல அவன் மட்டும் எய்ட்ஸ் நோயாளியா இருக்குறது பிடிக்கலயாம்.அவன போலீஸ்ல பிடிச்சிக் கொடுத்து உண்மைய எங்க வீட்டுக்கு சொல்ல வேண்டாம்னு போலீஸ் கிட்ட கெஞ்சி உண்மைய மறைச்சி இருக்கேன்டா.

அவனுக்கு எய்ட்ஸ் அப்படின்னு சொன்ன உடனே என் வாழ்க்கை மட்டும் இல்லாம, திவ்யாவோட வாழ்க்கையும் பாழா போனத நினச்சு அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் நான் செத்துட்டு இருக்கேன்.

டேய் விஜய்! உனக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்றதுன்னு தெரியலடா எனக்கு.

எனக்கு எய்ட்ஸ் வந்தத பத்திக் கூட கவலைப் படலை. அநியாயமா திவ்யாவோட வாழக்கைய மோசம் பண்ணிட்டேனு கவலை படுகிறேன். அதனால்தான் அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் அவ கிட்ட ஒரு வார்த்தைக் கூட சந்தோசமா பேசலடா.

ஏன் அப்படி பண்ணடா? திவ்யா கிட்ட விஷயத்த சொல்லி இருக்கலாம் இல்லையா?

எப்படி சொல்றதுடா? முதல் இரவுக்கு வர பொண்ணுக்கிட்ட போய் எனக்கு எய்ட்ஸ் இருக்குன்னு சொன்னா எந்த பொண்ணுடா ஏத்துக்குவா? என்ன தப்பா நினைக்குறது மட்டும் இல்லாம, நான் அவல வேணும்னே ஏமாத்திட்டதா நினைச்சிக்க மாட்டாளா? எத்தன பொண்ணுங்களுக்கு இருக்குடா உண்மைய சொன்னா பொறுமையா கேட்குற சக்தி. அதுவும் வாழக்கை விஷயத்த பத்தி பேசும்போது...
நீ சொல்றதும் சரிதாண்டா...
அதனால்தான் அவகிட்ட நான் சந்தேக படுறமாதிரி நடந்துக்கிட்டேன். உண்மைய சொல்லப் போனால் அவ ரொம்ப நல்ல பொண்ணுடா. நான் சந்தேக படுற மாதிரி நடிச்சா அவ என்ன விட்டுட்டு போய்டுவானு நினச்சேன். எவ்வளவு கேவலமா என் மனச கல்லாக்கிகிட்டு அவல கேட்கக் கூடாத கேள்விஎல்லாம் கேட்டேன்டா.

ஹ்ம்ம்ம்ம்ம்
ஆனால் அவ அப்படி செய்யலடா. அதுவே அவ மேல எனக்கு இன்னும் பாசத்தை அதிகமாக்குச்சு. நான் தாலி கட்டின பாவத்துக்கு திவ்யாவோட வாழ்க்கை வீணாப் போய்டக் கூடாதுன்னு தான் அவளாவே என்ன விவாகரத்து பண்ணி வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை படுறேண்டா.

ஹ்ம்ம்ம்ம்ம்

நான் அவல திட்டும் போதெல்லாம் மனசுக்குள்ள எப்படி அழுது இருக்கேன் தெரியுமா? அவளுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு மனசுக்குள்ளவே போட்டு புழுங்கிட்டு இருக்கேண்டா. சொல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம நான் படுற அவஸ்த்தை இருக்கே.. எய்ட்ஸ் வந்தத விட இந்த மனக் கவலையிலே சீக்கரம் செத்துடுவேன் போலருக்குடா.

அழாதடா விஜய்... என்ன பேசுறதுன்னு திகைச்சு போய் நிக்கறேன்டா நானு. என்ன ஆறுதல் கூறினாலும் உன் மனசு தேறாதுன்னு தெரியுதுடா.

நான் யாருக்கு என்னடா பண்ணேன். எனக்கு ஏன் இந்த தண்டனை....

கவலை படாதடா. எல்லாம் நல்லா நடக்கும்...

எப்படிடா கவலைப் படாம இருக்குறது.. ஏதாவது ஒரு விபத்துல செத்துப் போய் இருந்த கூட கவலை இல்லடா.. ஒரு பொண்ணோட வாழ்க்கைல விளையாண்டு, ஒருத்தனுக்கு அவன் சாகுற நாள் எதுன்னு தெரிஞ்சுட்டே வாழுற கொடுமை இருக்கே. இது எதிரிக்குக் கூட வரக் கூடாதுடா.

ஆமாம்டா. நீ சொல்றது சரிதாண்டா. கடவுள் கடவுள்னு கும்பிடற எனக்கு இப்ப கடவுள் மேல் வெறுப்பா இருக்குடா?

சுரேஷ்!நீ எனக்கு ஒண்ணு செய்வியா?

என்ன செய்யணும் சொல்லுடா?

நான் எந்த நேரம் எப்படி சாவேன்னு தெரியாது. அதனால என்ன பத்தி திவ்யாகிட்ட தப்பு தப்பா எடுத்து சொல்லி அவளுக்கு நீதாண்டா நல்லா வாழ்க்கைய அமைச்சுக் கொடுக்கணும். ஆனா கடைசியா நான் செத்த பிறகு நான் அவல எவ்வளவு விரும்பினேன், எதனால அவகிட்ட இப்படி நடந்துகிட்டேன் அப்படிங்கற உண்மைய சொல்லிடுடா!

டேய் என்னடா? போடா... உனக்கு ஒண்ணும் ஆகாது. சுரேஷால் பேசமுடியவில்லை கண்கள் கலங்கியது.

டேய் ஏன் டா நீ அழற. என்ன மன்னிச்சிட சொல்லுடா. என் மனசு அறிஞ்சு அவளுக்கு எந்த துரோகமும் பண்ணலன்னு சொல்லுடா. அவல இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்க சொல்லுடா ப்ளீஸ்..

டேய்! நான் உனக்காக அழுறதா? உன் மனைவிக்காக அழுறதானு தெரியலடா. நீ கவலைப் படாத. என் உயிர் நண்பன் உன்ன பத்தி நான் அவகிட்ட பேசி நிலமைய புரிய வைக்கறேண்டா.. சரியா?

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தது மேல துணிக் காயப் போட வந்த திவ்யாவின் காதில் தெளிவாக விழுந்தது. அவர்கள் இருவரும் பேசியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். விஜய் தன்னிடம் ஏன் அவ்வாறு நடந்து கொண்டான் என்ற காரணம் புரிந்தது அவளுக்கு. திருமணத்திற்கு முன்பாக போனில் எவ்வளவு காதலுடன் பேசினான். அவனது திடீர் மன மாற்றத்திற்கான காரணம் புரிந்தது திவ்யாவிற்கு. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கிழே சென்றாள்.

சுரேஷ் விஜய்க்கு ஆறுதல் கூறிவிட்டு கனத்த இதயத்துடன் விடைப் பெற்று சென்று விட்டான்.

இரவு மணி 9 ஆகி இருந்தது....

விஜய் நான் கொடுக்குற இந்த பால சாப்பிடு ப்ளீஸ்! வேண்டாம்னு சொல்லிடாத! அவள் கெஞ்சுவது அவனுக்கே பாவமாக இருந்தது. மறுப்பு சொல்லாமல் வாங்கிக் குடித்தான். குடித்த சிறிது நேரத்தில் மயக்கமாகி சோபாவில் சரிந்து விட்டான்.

திவ்யா அவன் குடித்த பாலில் மயக்க மருந்து கலந்து இருந்தாள். விஜய் நீ என்கிட்டே உன் மனக் கழ்டத்த எல்லாம் சொல்லாம உன் மனசுக்குள்ளவே போட்டு பூட்டி வசிக்கிட்டியே. எப்படி விஜய் தாங்கின? நீ நான் நல்லா இருக்கணும் என்பதற்க்காக எப்படி எல்லாம் நடிச்சி இருக்க? விஜய் என்னையும் ஒரு சராசரி பொண்ணுன்னு நினைச்சிட்டியா? உன்கிட்ட பத்து நாள் போன்ல பேசும்போது உன் அன்ப பத்தி புரிஞ்சுகிட்டேன் விஜய். உன்ன இந்த நிலையில விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு என்ன என்ன கல் நெஞ்சக் காரின்னு நினைச்சியா?

உன் அன்போட ஆழத்தை நீ காட்டிட்ட. என் அன்ப பத்தி நீ புரிஞ்சிக்க வேணாம். நீ இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்ல விஜய். அதனால்தான் நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன். நல்லதோ கெட்டதோ உன்கூட வாழ்ந்தா தான் எனக்கு வாழ்க்கை. உன்கூட வாழத்தான் கொடுத்து வைக்கல. உன்னோட சாகவாவுது ஆசைப் படுகிறேன் விஜய்.

விஜய் மயக்கமாக படுத்து இருந்தான். அவனது தலையை தனது மடியின் மீது தூக்கி வைத்துக்கொண்டாள். தன் கையில் இருந்த ஊஸியை எடுத்து, அவன் உடலில் இருந்த ரத்தத்தை எடுத்து தன் உடலுக்குள் செலுத்திக் கொண்டாள்.

தான் சாகும்போது தனக்கு துணையாக தன் அன்பு மனைவி திவ்யாவும் வரப்போகிறாள் என்று தெரியாமல், வாழ்வில் இணைய முடியாத தாம் சாவில் இணைய போகிறோம் என்று அறியாமல் மயக்கத்துடன் தூங்கிக்கொண்டு இருந்தான் விஜய்.

********************முற்றும்**************************


Comments

Popular posts from this blog

சின்ன சின்ன ஆசைகள்

எனது சின்ன சின்ன ஆசைகளை இங்கு பதிவு செய்கிறேன். படித்து முடித்து விட்டு அடி பாவி! இதுவா உனக்கு சின்ன சின்ன ஆசைகள் அப்படின்னு கேட்கக் கூடாது. சரியா? ******** யாருமற்ற உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும் . அதில் நான் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும் . பூ , காய் , கனி , செடி , கொடி , மரம் இவையனைத்தும் பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும் . மான் , மயில் , குயில் , புறா , நாய் இவையனைத்தும் எனக்கு தோழிகள் ஆக வேண்டும் . மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும் . பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும் . உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும் . நிலவினை கையில் பிடித்து அதனுடன் கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும் . நட்புக்கு இலக்கணம் நான் என்று என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும் . சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும் அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும் . பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும் துடைத்து எடுக்க ஒரு ரப்பர் ( அழிப்பான் ) வேண்டும் . எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில் கடைகளில் கிடைக

"இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?"

ஏ சுனாமியே! நீ செத்தொழிய மாட்டாயோ ? ஏ மரணமே! உனக்கு மரணம் வாராதோ? ஏ சுனாமியே! பச்சிளம் குழந்தை என்று பாராமல் பலி கொண்டாயே அந்த மொட்டுகளிடம் மன்னிப்பு கேள் ... ஏ மரணமே! சதியாலோசனை செய்து சுனாமிக்குத் துணை போனையே என் உயிர் மக்களிடம் மண்டியிடு... ஏ இயற்கையே ! உலகத்தில் பூத்து உனக்கு அழகு சேர்த்த மனித இனங்களை உன் கொபக்கனளுக்கு இறையாக்குகிறாயே... ஏ இயற்கையே உன்னையும் அழித்துக் கொண்டு மனிதப் பூக்களையும் அழிக்கும் நீ இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?!!!

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......