Skip to main content

அனுபவம்






















அம்மாவின் செல்லமகளாய்
அப்பாவின் பாசக்குழந்தையாய்
சித்தப்பாவின் குட்டிதேவதையாய்
அத்தையின் சுட்டிப்பெண்ணாய்
பாட்டியின் அன்பையும் அனுபவித்து வளர்ந்தபோது
அம்மாவின் வயிறு வீங்கியது.
அடுத்துப் பெறப்போகும் பிள்ளைக்காக.

அன்னையின் முலைப்பாலை
பகிர்ந்துகொள்ள தங்கை வந்தாள்.
என்மீது அன்புக்காட்டிய சொந்தமெல்லாம்
தங்கைமீது சாய்ந்து விட்டது
அன்னை உள்பட அவள்மீது அன்புக் காட்ட.

ஏனோ என்கோபம் எல்லாம்
முத்தத்திற்கு ஒரு சாக்லேட் கொடுக்கும்
சித்தப்பாவின் மீதும் அல்ல.
வாரியணைத்து முத்தமிடும்
பாட்டியின் மீதும் அல்ல
கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும்
அத்தையின் மீதும் அல்ல
என்னை மார்பின் மீது போட்டுத்தூங்கும்
தந்தையின் மீதும் அல்ல
என்னைக்கருவில் சுமந்து
பாசத்தை பகிர்ந்து கொடுத்த
தாய்மீது மட்டுமே..

தங்கையை கொஞ்சும் போதும்
அவளின் தளர்நடையை ரசிக்கும்போதும்
கைநீட்டி தாயை தூக்கச் சொன்ன
தங்கையை கிழேதள்ளி
என்னைமட்டும் தூக்குஎன்று
அன்னையருகில் சென்றபோது
என்னை அடித்துவிட்டு
அழும்தங்கையை தூக்கி சமாதானப்படுத்தும்போது
இன்னும் கோபம் அதிகமானது அன்னை மீது.

என்னை தமிழிலும் தங்கையை
ஆங்கிலப் பள்ளியிலும் படிக்க வைத்தது
என்னவோ தந்தைதான் என்றாலும்
என் கோபம் எல்லாம் அன்னை மீதுதான்
அளவின்றி எகிறியது.

தந்தையின் ஸ்பரிசம் குறைந்தபோதும்
பாட்டியின் கதைசொல்லும் நேரம் தவறியபோதும்
முத்தங்களை எனக்கும் தங்கைக்கும்
பகிர்ந்துகொடுத்த அன்னையின் மீதுதான்
என் வெறுப்புகள் எல்லாம்.

அங்கே செல்லாதே இங்கே போகாதே
ஆணுடன் பேசாதே இரவில் வெளியே போகாதே
அரட்டை அடிக்காதே என்று கூறும்போது
அன்னையின் மீது உள்ளகோபம் அளவின்றி எகிறியது.

என் தாயே!
நேற்று வரை தவறாக உணர்ந்து இருந்தேன்
என்மீது உனக்குள்ள பாசத்தை.
தாய் அன்பில் மாசு இல்லை
தாய்க்கு நிகருமில்லை என்று
இன்று நானும் இருகுழந்தைகளுக்கு தாயானபோதுதான்
தெரிந்து கொண்டேன் தாயே
என்மீது நீகொண்ட அன்பை....

Comments

Popular posts from this blog

சின்ன சின்ன ஆசைகள்

எனது சின்ன சின்ன ஆசைகளை இங்கு பதிவு செய்கிறேன். படித்து முடித்து விட்டு அடி பாவி! இதுவா உனக்கு சின்ன சின்ன ஆசைகள் அப்படின்னு கேட்கக் கூடாது. சரியா? ******** யாருமற்ற உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும் . அதில் நான் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும் . பூ , காய் , கனி , செடி , கொடி , மரம் இவையனைத்தும் பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும் . மான் , மயில் , குயில் , புறா , நாய் இவையனைத்தும் எனக்கு தோழிகள் ஆக வேண்டும் . மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும் . பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும் . உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும் . நிலவினை கையில் பிடித்து அதனுடன் கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும் . நட்புக்கு இலக்கணம் நான் என்று என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும் . சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும் அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும் . பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும் துடைத்து எடுக்க ஒரு ரப்பர் ( அழிப்பான் ) வேண்டும் . எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில் கடைகளில் கிடைக

"இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?"

ஏ சுனாமியே! நீ செத்தொழிய மாட்டாயோ ? ஏ மரணமே! உனக்கு மரணம் வாராதோ? ஏ சுனாமியே! பச்சிளம் குழந்தை என்று பாராமல் பலி கொண்டாயே அந்த மொட்டுகளிடம் மன்னிப்பு கேள் ... ஏ மரணமே! சதியாலோசனை செய்து சுனாமிக்குத் துணை போனையே என் உயிர் மக்களிடம் மண்டியிடு... ஏ இயற்கையே ! உலகத்தில் பூத்து உனக்கு அழகு சேர்த்த மனித இனங்களை உன் கொபக்கனளுக்கு இறையாக்குகிறாயே... ஏ இயற்கையே உன்னையும் அழித்துக் கொண்டு மனிதப் பூக்களையும் அழிக்கும் நீ இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?!!!

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......