Skip to main content

"பௌர்ணமி நிலவு"

கவலைப்படாதீங்க Mr. சாரங்கபாணி. உங்க மனைவியை எப்படியும் காப்பாத்திடலாம். உங்க சொந்தங்கள் இல்லை வேறு யாராவது மற்று சிறுநீரகம் கொடுக்க முன் வந்தார்கள் என்றால் உங்கள் மனைவியின் உயிருக்கு நான் உத்திரவாதம் தருகிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டு வாரத்திற்குள் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்று டாக்டர் தன் கடமையாக சொல்லிவிட்டு சென்று விட்டார்.

சாரங்கபாணி தான் இடிந்து பொய் அமர்ந்து இருந்தார்.தனது உயிர் மனைவி இரண்டு சிறுநீரகங்களையும் இழந்துஉயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறாள். வயதானகாலத்தில் பிள்ளைங்க தான் பெற்றவர்களுக்கு ஆறுதல்னுசொல்வாங்க. ஆனால் நான் பெற்ற இரண்டு பிள்ளைகளும்சரி இல்லையே.

சாரங்கபாணி நினைத்துக் கொண்டு இருக்கையிலேயேஅவருடைய இரண்டாவது மகன் ரோஹித், மனைவிஐஸ்வர்யா உடன் தனது தாயாரை பார்க்க வந்தான்.

அப்பா அம்மாவுக்கு என்ன ஆச்சு. ஏன் என்கிட்ட சொல்லல.யாரோ ஒரு மூணாவது மனுஷன் சொல்லி தெரியுதுப்பா .

டேய்! வாய மூடுடா. பெத்தவங்கள பத்தி கவலைப்படுறவனா இருந்தா எங்களுக்கு தெரியாம கல்யாணம்பண்ணி எங்க நிம்மதிய கெடுத்து இருப்பியா? உன்னாலதான்டா என் பொண்டாட்டி இந்த நிலமையில இருக்குறா.எங்க முகத்துலேயே முழிக்காத போடா. உன்ன பார்த்தாஅவ உயிர் இப்பவே போனாலும் போய்டும். உனக்கும்அறிவு இல்ல. நீ இழுத்துட்டு வந்ததுக்கும் அறிவு இல்ல.போடா வெளியே... கொதித்துப் போய் கூறிக் கொண்டுஇருந்தார் சாரங்கபாணி.

அதன்பிறகு ரோஹித் அங்கு நிற்கவே இல்லை. தனதுமனைவியை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் சென்றுதனது தாயின் உடல் நிலையைப் பற்றி விசாரித்தான்.டாக்டர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்து போனான்.

ரோஹித் காதல் திருமணம் செய்தது மட்டுமே அவனதுதாய்க்கும் தந்தைக்கும் பிடிக்கவில்லையே தவிர மற்றபடிஅவனது தாய் அவன் மீதும் அவனது அண்ணன் மீதும்அளவற்ற பாசத்தை வைத்து இருந்தாள். தாயை சாகும்நிலையில் விட்டுவிட்டு அவளை காப்பாற்ற முடியாமல்போனால் நான் அவளுக்கு மகனாக இருந்து என்ன பயன்?

ரோஹித் கண்களில் கலக்கம் குடி ஏறியது.ஐஸ்வர்யாவிற்கு தெரியும் தனது கணவன், அவன் தாய்மீது எவ்வளவு அன்பு வைத்து இருக்கிறான் என்று. தான்ரோஹித் காதலித்து திருமணம் செய்தது மட்டுமேஅவர்களுக்கு பிடிக்கவில்லையே தவிர மற்றபடி அவர்கள்குணத்தில் தங்கமானவர்கள்.

தனது கணவனின் கலக்கத்தைப் போக்க எண்ணி அவனைடாக்டரிடம் இருந்து தனியே அழைத்து வந்து தன்விருப்பத்தைக் கூறினாள். ரோஹித் ஆச்சரியத்துடன்அவளின் முகத்தைப் பார்த்தான்.

சாரங்கபாணி தனது மனைவியின் நிலைமையை அங்குவந்து இருந்த தனது மூத்த மகனிடம் சொல்லிக் கொண்டுஇருந்தார். மூத்த மகன் வசந்தும் அவனது மனைவிநளினியும் பரிதாபத்தோடு கேட்டுக் கொண்டு இருந்தனர்.

வசந்த்! உங்க அம்மாவுக்கு மாற்று சிறுநீரகம் வைக்கலாம்அப்படின்னு பார்த்தா, அவ ரத்த வகை நம்ம யாருக்கும் இல்லடா. உன் மனைவியோடது மட்டும் தான் ஒத்துப் போகுது. நான் வாய் கூசாம கேட்கக் கூடாது தான். உங்கஅம்மாவ இழக்க எனக்கு மனசு வரலடா. உங்க அம்மாவபத்தி உனக்கு நான் சொல்லித் தெரிய தேவை இல்ல. அவதெய்வம் பா. அவ உயிர் ஊசலாடிட்டு இருக்கு. அவளோடஅன்ப, இன்னும் நீயும் நானும் அனுபவிக்கனும்ப்பா.அத.... அதன..... அதனால....

சொல்லுங்க அப்பா! என்ன சொல்ல வரீங்க?

நான் கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காத வசந்த. உன்மனைவியோட ஒரு சிறுநீரகம் கொடு... கொடுத்தா உன்அம்மாவ இன்னும் நூறு வருஷம் உயிரோட பார்க்கலாம்டா.


வசந்த் பதில் சொல்வதற்குள்ளாகவே டாக்டர்அழைப்பதாக சாரங்கபாணியை வந்து நர்ஸ் அழைத்தாள்.

என்னங்க! உங்க அப்பாவுக்கு கொஞ்சமாவுது அறிவுஇருக்கா? வயசு ஆனாலே அறிவு இருக்காதா என்ன?வயசானக் கட்டை உங்க அம்மா! அது இருந்தா என்ன?போனா என்ன? அவங்களுக்கு என்னுடைய கிட்னியைக்கேட்டால் எப்படி? அவங்க வாழ்ந்து முடிச்சவங்க ... நாமவாழ்ந்து பார்க்க வேண்டாம்? உங்க அப்பா எப்படி வாய்கூசாம என்ன கேட்கலாம்?

விடு நளினி. அவர் கேட்டா நாம கொடுக்கப் போறோமாஎன்ன?. அவங்கள விட நீதான் எனக்கு முக்கியம். நம்மகடமை வந்து பார்த்தோம். கிளம்புவோம் வா. ஏதோ காசுபணம் கேட்டா ரெடி பண்ணித் தரலாம். நாம என்னபண்றது. எங்க அம்மாவோட விதி இவ்வளவுதான்னுஇருக்கு. யார் என்ன பண்ண முடியும்... வா நம்மாலமுடியாதுன்னு சொல்லிட்டு கிளம்புவோம். அவருக்குஇன்னொரு பையனும் இருக்கான். முடிஞ்சா அவன்பார்த்துக்கட்டும் என்று கூறி அம்மா இருந்த அறையைநோக்கி நடந்தான்.

டாக்டரிடம் இருந்து திரும்பி வந்த சாரங்கபாணிக்கு தனதுமகனும் மருமகளும் பேசிய உரையாடலை கேட்கநேர்ந்தது. அவர்கள் பேசியதைக் கேட்டு ஆடிப் போனார்.பணிவாக பேசும் மருமகளா இன்று இப்படி பேசியது.அம்மா, அப்பா என்று உருகிய தனது மகனா இன்று யாரும்வேண்டாம் என்று உதறி தள்ளுவது. அவருக்கு அவரின்கண்களையே நம்ப முடிய வில்லை. தனது மூத்தமகனையும் மருமகளையும் இது நாள் வரைக்கும்கோபுரத்தில் தூக்கி வைத்து இருந்தார். இன்று அவர்கள்பேசிய பேச்சால் ஒரே நொடியில் குப்பைத் தொட்டியில்தூக்கிப் போடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

சாரங்கபாணி தன் மூத்த மருமகளிடம் அவள் சிருநீரகம்கொடுப்பாள் என்ற நம்பிக்கையில் கேட்க வில்லை..இருப்பினும் பின்னாளில் என்னை ஒரு வார்த்தைக் கேட்டுஇருக்கக் கூடாதா மாமா? என்று மருமகள் கேட்டுவிடக்கூடாதே என்பதற்க்க்காகதான் கேட்டார்.

தனது இரண்டாவது மருமகள் ஒரு சிறுநீரகம் கொடுக்கசம்மதித்து இருக்கிறாள். வீராப்பாக வேண்டாம் என்றுசொல்லி விட்டு வந்து விட்டேன். இனி என்ன செய்வது.கடைசி வாய்ப்பாக தன் மூத்த மருமகளிடம் கேட்டுஅவமானமும் பட்டாகி விட்டது. தன் அன்புக்குரியமனைவியின் நிலைமை அவ்வளவு தானா? துக்கம் நெஞ்சை அடைத்தது. வழியும் விழி நீரோடு தரையில்அமர்ந்தார்.

அவரது கண்களில் வழிந்த நீரை ஐஸ்வர்யா துடைத்துவிட்டாள். மாமா! அழாதீங்க. அவங்க பேசியதை எல்லாம்நாங்களும் தான் கேட்டோம். அவர் ஒருத்தர் மட்டும்உங்களுக்கு மகன் இல்ல. உங்களுக்கு இன்னொருமகனும் இருக்கார். நாங்க உங்கள அப்படியேவிட்டுடுவோமா? எங்களுக்கு நீங்களும் அத்தையும்ரொம்ப முக்கியம் மாமா. உங்களுடைய ஆசிர்வாதம்எங்களுக்கு வாழ்க்கை முழுதும் வேணும்.

நான் சிறுநீரகம் கொடுக்குறதுக்கு நீங்க சம்மதிக்க வில்லை என்றால் நாங்க
உங்களை விட்டுவிடுவோமா? எங்க மேல எந்த வெறுப்பு இருந்தாலும் அதை அத்தையோட ஆபரேஷனுக்கு அப்புறம் வச்சிக்கோங்க மாமா. தயவு செய்து அத்தைக்காக எங்க மேல இருக்குற வெறுப்ப கொஞ்ச நாள் ஒதுக்கி வைங்க.
சாரங்கபாணி கையெடுத்துக் கும்பிட்டார்.
செண்பகம் அம்மாவுக்கு இன்று தான் ஆபரேஷன் நடந்து முடிந்தது. ஆபரேஷன் முடிந்து தனது மனைவி கண் விழித்த உடன் நடந்த விவரங்களை சாரங்கபாணி கூறினார்.

செண்பகத்திற்கு கண் கலங்கியது. காதலித்து தங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ததற்க்காக எவ்வளவு சாபம் விட்டோம். தன் இரண்டாவது மகனும் மருமகளும் கண் எதிரே கஷ்டப் படுவது தெரிந்தும் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டோம். காதல் திருமணம் செய்ததற்க்காக குடும்பத்தை விட்டே ஒதுக்கி வைத்தோம். எந்த மருமகள் நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்து விட்டாள் என்று நினைத்தோமோ, அந்த மருமகள் இன்று எனக்கு உயிர்ப் பிச்சை அளித்து இருக்கிறாள். நான் அவளை உடனே பார்க்கணும் . ஐஸ்வர்யாகிட்ட மன்னிப்புக் கேட்கணும்.

ஐஸ்வர்யா வந்தாள். அவளுக்கும் ஆபரேஷன் பண்ணி இருந்ததால் நடந்து வருவதற்கு கொஞ்சம் சிரமம் இருந்தது. ரோஹித் தான் கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்தான்.

செண்பகத்தின் காலைத் தொட்டு வணங்கினாள். செண்பக அம்மாள் கூனி குறுகிப் போனார். உடம்பு இப்போ எப்படி இருக்கு அத்தை. நீங்க எதுக்கும் கவலைப்
படாதீங்க. உங்களுக்கு நாங்க இருக்கோம்.

எங்கள மன்னிச்சிடுமா. நாங்களே பார்த்து கல்யாணம் பண்ண பொண்ணு வைரம்னு நினைச்சோம். அது எல்லாம் உண்மை இல்லைன்னு அவ நிருபிச்சிட்டா! ஆனா உன்ன பித்தளைன்னு ஒதுக்கி வச்சோம். ஆனால் நீ அதுவும் உண்மை இல்லன்னு எங்களுக்கு புரிய வச்சிட்டமா. உண்மையிலேயே என் பையன் மட்டும் இல்லமா! நாங்களும் கொடுத்து வச்சி இருக்கோம்..

இல்லை அத்தை. எல்லோர் வீட்லயும் காதல் கல்யாணம் பண்ணா எதிர்ப்பு
இருக்கத்தான் செய்யும். நீங்க புதுசா எதுவும் பண்ணலையே. ஆசையா வளர்த்த
மகனோட கல்யாணத்த பார்க்க முடியாத ஒரு தாயோட ஏக்கம் நியாயமானது தான் அத்தை. உங்க மனசு பூ மாதிரின்னு நான் எப்போதோ புரிஞ்சிக்கிட்டேன் அத்தை.

உங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணது எங்க தப்புதான். முதல்ல நீங்க தான் அத்தை எங்கள மன்னிக்கணும்... தங்கம் மாதிரி ஒரு பிள்ளைய பெத்து எனக்காக கொடுத்து இருக்கீங்க. உங்க வளர்ப்புல அவர் தங்கமா ஜொலிக்கிறார் அத்தை. பார்க்க போனால் இந்த குடும்பத்துல வந்து வாழ, நான் தான் அத்தை கொடுத்து வச்சி இருக்கணும்..

நீ பேசுற பேச்சுல இருந்து உன் மனச புரிஞ்சிக்க முடியுதுமா எங்களால.
எல்லோர் வீட்லயும் உன்ன மாதிரியே மருமகள் இருந்தா, எவ்வளவு நல்லா இருக்கும்.

ரோஹித் தான் கண் கலங்கி நின்றான். உண்மையில் ஐஸ்வர்யா ஒரு தெய்வம் தான். இல்லையென்றால் எத்தனைப் பெண்களுக்கு வரும் மாமியாருக்காக ஒரு கிட்னியை தியாகம் செய்ய. தன்னை நிராகரித்த மாமியாருக்கு ஒரு கிட்னியை தியாகம் செய்யும் அளவுக்கு, இவ்வளவு பெரிய தியாகம் படைத்தவளா என் மனைவி!? தான் தேர்ந்து எடுத்த துணை ஒரு மாணிக்கம் தான் என்று பூரித்து போய் நின்றான்.

****முற்றும்*****


Comments

Popular posts from this blog

சின்ன சின்ன ஆசைகள்

எனது சின்ன சின்ன ஆசைகளை இங்கு பதிவு செய்கிறேன். படித்து முடித்து விட்டு அடி பாவி! இதுவா உனக்கு சின்ன சின்ன ஆசைகள் அப்படின்னு கேட்கக் கூடாது. சரியா? ******** யாருமற்ற உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும் . அதில் நான் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும் . பூ , காய் , கனி , செடி , கொடி , மரம் இவையனைத்தும் பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும் . மான் , மயில் , குயில் , புறா , நாய் இவையனைத்தும் எனக்கு தோழிகள் ஆக வேண்டும் . மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும் . பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும் . உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும் . நிலவினை கையில் பிடித்து அதனுடன் கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும் . நட்புக்கு இலக்கணம் நான் என்று என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும் . சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும் அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும் . பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும் துடைத்து எடுக்க ஒரு ரப்பர் ( அழிப்பான் ) வேண்டும் . எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில் கடைகளில் கிடைக

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

"இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?"

ஏ சுனாமியே! நீ செத்தொழிய மாட்டாயோ ? ஏ மரணமே! உனக்கு மரணம் வாராதோ? ஏ சுனாமியே! பச்சிளம் குழந்தை என்று பாராமல் பலி கொண்டாயே அந்த மொட்டுகளிடம் மன்னிப்பு கேள் ... ஏ மரணமே! சதியாலோசனை செய்து சுனாமிக்குத் துணை போனையே என் உயிர் மக்களிடம் மண்டியிடு... ஏ இயற்கையே ! உலகத்தில் பூத்து உனக்கு அழகு சேர்த்த மனித இனங்களை உன் கொபக்கனளுக்கு இறையாக்குகிறாயே... ஏ இயற்கையே உன்னையும் அழித்துக் கொண்டு மனிதப் பூக்களையும் அழிக்கும் நீ இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?!!!