எனது சின்ன சின்ன ஆசைகளை இங்கு பதிவு செய்கிறேன். படித்து முடித்து விட்டு அடி பாவி! இதுவா உனக்கு சின்ன சின்ன ஆசைகள் அப்படின்னு கேட்கக் கூடாது. சரியா? ******** யாருமற்ற உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும் . அதில் நான் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும் . பூ , காய் , கனி , செடி , கொடி , மரம் இவையனைத்தும் பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும் . மான் , மயில் , குயில் , புறா , நாய் இவையனைத்தும் எனக்கு தோழிகள் ஆக வேண்டும் . மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும் . பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும் . உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும் . நிலவினை கையில் பிடித்து அதனுடன் கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும் . நட்புக்கு இலக்கணம் நான் என்று என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும் . சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும் அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும் . பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும் துடைத்து எடுக்க ஒரு ரப்பர் ( அழிப்பான் ) வேண்டும் . எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில் கடைகளில் கிடைக...