கடல் தன்னுடைய உக்கிர தாண்டவத்தை ஆடிவிட்டு அமைதியாக இருந்தது . ஆனால் அது சுனாமி என்னும் பெயரில் வந்து போனதால் யாருடைய மனதிலும் அமைதி இல்லாமல் செய்து விட்டது . சுனாமி வந்த வேகத்தில் ஏற்கனவே இருந்த வீடுகளை எல்லாம் அதன் சுவடே தெரியாமல் அடித்து சென்று இருந்தது . கடலின் கொந்தளிப்பு அடங்கி விட்டது . ஆனால் அது ஏற்படுத்திய சேதத்தால் , மக்களின் மனதில் கொந்தளிப்பு ஏற்பட்டு அலை கடலோடு போட்டிபோட்டுக் கொண்டு இருந்தது . சரவணன் கண்களில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்க நேரம் இல்லாமல் , பார்ப்பவர் அனைவரிடமும் ஏதோ கேட்டுக் கொண்டு இருந்தான் . அவர்கள் அனைவரும் எந்த நேரத்துல என்னப்பா கேட்குற . எல்லோரும் உன்னை மாதிரிதான வயிறு எரிஞ்சி பொய் நிக்கிறோம் . உனக்கு எப்படிப்பா கேட்க மனசு வந்தது என்று ஏக வசனம் பேசிக் கொண்டு சென்றனர் . சரவணன் சோர்ந்து போய் அமர்ந்தான் . சுனாமி வந்து பாரபட்சம் இன்றி எல்லாவற்றையும் அடித்து சென்று விட்டதால் , அனைவரும் ஒரு வேலை சாப்பாட்டுக்கே அடுத்தவரை எதிர் பார்த்துக் காத்திருந்தனர் . இந்நேரத்த...