காலை மணி ஏழு. சூர்யா கட்டிலில் புரண்டுப் படுத்தான். இருபத்தியேழு வயது மதிக்கத்தக்க, திரண்ட தோள்களைக் கொண்ட அழகான வாலிபன். தாய் லக்ஷ்மி அவனை வந்து எழுப்பினாள். டேய் சூர்யா! எழுந்திருடா! இன்னைக்குப் போய் இவ்வளவு நேரம் தூங்குறியே! இன்னைக்கு என்னனு தெரியுமா? எழுந்திருடா.... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரேன் நீ போமா. டேய்! இன்னைக்கு உனுக்கு பெண் பார்க்கப் போறோம் எழுந்திரு டா. அதுகூட நினைவு இல்லாம தூங்குற! பிள்ளையாடா நீ? அம்மா சொன்னதும் கட்டிலில் இருந்து துள்ளி எழுந்து அமர்ந்தான். அம்மா! எனக்கு இந்த விஷயத்தை நேத்தே நியாபகப் படுத்தி இருந்தா நாலு மணிக்கெல்லாம் எழுந்திருப்பேன் இல்ல! ஏன்? இன்னும் ரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து உட்கார்ந்துக்க வேண்டியது தான? போடா போய் குளிச்சிட்டு வா. பத்து மணிக்கெல்லாம் பெண் வீட்டுக்குப் போகணும். அம்மா சொல்லி வாய் மூட வில்லை. பாத்ரூமுக்குள் சென்றுக் குளித்துக் கொண்டிருந்தான். குளித்து முடித்து விட்டு வெளியே வரும்போது தம்பி பாலு நின்றுக் கொண்டிருந்தான். அம்மா! இன்னைக்கு மழைதான்
Comments
Post a Comment