குனிந்தால் குழந்தைக்கு வலிக்குமோ
உருண்டு பிரண்டால் எந்தன்
பட்டுமேனி நோகுமோ என்று
கருவிலிருந்தே என்மீது அன்பு கொண்டு
பிறந்ததுமுதல் நேற்று வரை
சீராட்டி பாராட்டி வளர்த்து
தன் ரத்தத்தை பாலாக்கி பசியாற்றிய
என் அன்னை
இன்று என்னருகில் இல்லை........
பிஞ்சு கையால் அடிக்கும்போது
வலிக்காத போதும்
வலிக்கின்ற மாதிரி நடித்து
என்னை சந்தோஷப் படுத்தி
நான் கேட்டது மட்டும்மல்ல
கேட்காததையும் வாங்கிக் கொடுத்த
என் தந்தை
இன்று என்னருகில் இல்லை....
அடிக்கடி சண்டை போட்டாலும்
நோய் என்று வரும்போது
அன்னையுடன் சேர்ந்து எனக்காக கண்கலங்கும்
என் தங்கை
இன்று என்னருகில் இல்லை....
எங்கு சென்றாலும் எனக்கு
பிடித்ததை வங்கிக் கொண்டு
என்னுடன் செல்லமாக சண்டையிடும்
அன்னையைக் கண்டித்து
நான் மகிழ்வதைப் பார்த்து
மகிழ்ச்சிக் கொண்ட
என் அண்ணன்
இன்று என்னருகில் இல்லை....
ராசியான பெண், சுட்டிப் பெண், அழகான பெண் என
அழகாய் இல்லாதபோதும்
அழகாய் இருக்கிறாய் என் ராசாத்தி
என டிஷ்ட்டி கழிக்கும்
என் பாட்டி
இன்று என்னருகில் இல்லை...
இவ்வளவு உயிருக்கு உயிரான
உறவுகளை உதறி
எதை சாதித்தாய் என் காதலே!
நம்பிய காதலன் என்னை விட்டு
இன்னொருவளுடன் ஓடியதை தவிர!!!.........
Comments
Post a Comment