என் மகளே! நான் பிறந்தபோது என் தாய் பெற்ற பேரானந்தத்தை என்னையும் பெற வைத்தாய்..... கோடானு கோடி கொட்டிகொடுத்தும் பல பேருக்கு கிடைக்காத "அம்மா" என்ற ஸ்தானத்தை இந்த அபலையின் வயிற்றில் அவதரித்து நீ எனக்கு அளித்தாய்.... ஊரார் பேசும் "மலடி" என்ற சொல் அம்புகளிலிருந்து என்னைக் காத்தருளினாய்.... என் காதல் திருமணத்தில் பிரிந்த உன் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி உறவுகளை மீண்டும் உன் பிறப்பின் மூலம் மீட்டுக் கொடுத்தாய்... என் கண்ணே! நீ பிறந்த போதுதானடி எப்போதும் முகம் சுளிக்கும் அப்பா வீட்டுப் பாட்டியின் முகத்தில் புன்னகையைக் காண்கிறேன்... நீ தத்தித் தத்தி நடந்து வந்து தாத்தாவை பொக்கை வாய் தெரிய சிரிக்க வைத்து என் மீது கொண்ட கோபத்தை தனிய வைத்தாய்..... என் செல்லமே! நீ அம்மா என்று அழைக்கும் மழலைச் சொல்லை வேறு மொழியோடு ஒப்பிட வழி தெரியாமல் தவிக்கிறேன்... அம்மா என்ற கௌரவப் பட்டம் அளித்து இப்பிறவியை எனக்கு புனிதப்படுத்திக் கொட