Skip to main content

Posts

"தவற விட்ட பொக்கிஷங்கள்"

* இரவு பத்து மணிக்கு பிறகு கடற்கரையில் அமர்ந்து பவுர்ணமியை ரசித்து பார்க்கும் தருணம் . * நண்பனுக்கு பண உதவி , பொருள் உதவி என்றால் அம்மாவின் அனுமதிக்காக காத்திருக்காத நேரம் . * நண்பனை மச்சி , மாமா என்று வாஞ்சையோடும் உரிமையோடும் பேசும் வார்த்தைகள் . * பள்ளி நாட்களில் நட்ட நடு ராத்திரியில் ரோட்டோர டீ கடையில் நண்பனோடு டீ குடிக்கும் திருட்டு இரவுகள் . * சாலையோர பானிபூரி கடையில் பசங்களோடு பசங்களாக நின்று பானிபூரி சாப்பிடும் வாய்ப்பு . * நண்பன் வீட்டு கல்யாணத்தில் குடும்பத்தில் ஒருவராக முன் நின்று நடத்தும் பொன்னான நாட்கள் . * ஆண் நண்பர்களோடு அடிக்கடி பைக்கில் உல்லாச பயணம் செல்லும் இன்ப சுற்றுலா . * இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் நண்பர்களோடு சினிமா பார்க்கும் உன்னத நாட்கள் . * நியூ இயர் , பண்டிகை நாட்களில் நண்பர்களோடு மணிகணக்கில் கடற்கரையில் அரட்டை . * நண்பன் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கும் போது ' மச்சி அடி வாங்க போற ...

"பெண்ணடிமை"

என்றோ விடிந்தது எமக்கான விடியல்!!! ஆனால் இன்றும் விடியலை நோக்கியே பயணம்............................!!!

சின்ன சின்ன ஆசைகள் (2)

ஆழ் கடலின் மேல் நடந்து செல்ல இரண்டடி பாதை வேண்டும். துன்பத்தில் தோல் சாய்ந்து கொள்ள கணவன் என்ற பெயரில் நண்பன் வேண்டும். கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக நட்பின் கரங்கள் வேண்டும். கடந்த கால வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை திருத்தி வாழ டேப் ரெகார்டரை போலவே எனக்கும் ஒரு ரீவைன் பட்டன் வேண்டும். துணிகளை போலவே மனித மனங்களையும் சலவை செய்ய ஒரு டிடர்ஜென்ட் கேக் வேண்டும். அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும் பட்டியலில் என் பெயரும் இருக்க வேண்டும். அடுத்து வரும் பிறவியிலாவது கம்பனுக்கு மகளாக பிறக்கும் வரம் வேண்டும். ரவி வர்மாவின் ஓவியம் கூட உயிர் பெற்று என்னுடன் நட்புறவாட வேண்டும். கடவுள்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறை மனிதனாக மாறும் சாபம் பெற்று மக்களின் துயர் அறிய வேண்டும். காதல் என்ற பெயரில் காமத்தை பரப்பும் இளைஜர்கள் மாறும் நிலை வர வேண்டும். இந்த உலகத்தை புரிந்து கொள்ள இன்னும் ஓர் இதயம் வேண்டும். காதலைப் பற்றி தெரிந்து கொள்ள ஓர் மிகப்பெரிய காதல் தோல்வி வேண்டும். ரமணிச்சந்திரனின் நாயகன் உருபெற்று, உயிர்பெற்று கணவனாக வரும் அற்புத வரம் வேண்டும். எந்தன் நிழல் கூட உறுப் பெற்று எனக்கு தோழியாக...

சின்ன சின்ன ஆசைகள்

எனது சின்ன சின்ன ஆசைகளை இங்கு பதிவு செய்கிறேன். படித்து முடித்து விட்டு அடி பாவி! இதுவா உனக்கு சின்ன சின்ன ஆசைகள் அப்படின்னு கேட்கக் கூடாது. சரியா? ******** யாருமற்ற உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும் . அதில் நான் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும் . பூ , காய் , கனி , செடி , கொடி , மரம் இவையனைத்தும் பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும் . மான் , மயில் , குயில் , புறா , நாய் இவையனைத்தும் எனக்கு தோழிகள் ஆக வேண்டும் . மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும் . பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும் . உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும் . நிலவினை கையில் பிடித்து அதனுடன் கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும் . நட்புக்கு இலக்கணம் நான் என்று என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும் . சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும் அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும் . பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும் துடைத்து எடுக்க ஒரு ரப்பர் ( அழிப்பான் ) வேண்டும் . எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில் கடைகளில் கிடைக...

"இப்படிக்கு காதல்"

என் தேசத்தில் என்னை நேசித்த ஒவ்வொரு ஜோடி புறாக்களும் தனித்தனியாக பிரிந்துசென்று தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றன. இங்கு நான் மட்டுமே ஒவ்வொரு முறையும் அனாதையாக்கி விடப்படுகிறேன்.... இப்படிக்கு காதல்...... .

"தோழி"

எனது கண்ணீரைத் துடைக்கும் முதல் "இரவுத் தோழி" தலையணை........

"தலையணை"

எனது தலையணைக்கு மட்டும் பேசும் சக்தி இருந்திருந்தால் இந்நேரம் கூறியிருக்கும்... என்னால் உப்பு நீரை அதிகம் குடிக்க முடியவில்லை அழுவதை இன்றோடு நிறுத்திக் கொள் என்று..........