Skip to main content

Posts

"பௌர்ணமி நிலவு"

கவலைப்படாதீங்க Mr. சாரங்கபாணி. உங்க மனைவியை எப்படியும் காப்பாத்திடலாம். உங்க சொந்தங்கள் இல்லை வேறு யாராவது மற்று சிறுநீரகம் கொடுக்க முன் வந்தார்கள் என்றால் உங்கள் மனைவியின் உயிருக்கு நான் உத்திரவாதம் தருகிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டு வாரத்திற்குள் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்று டாக்டர் தன் கடமையாக சொல்லிவிட்டு சென்று விட்டார். சாரங்கபாணி தான் இடிந்து பொய் அமர்ந்து இருந்தார் . தனது உயிர் மனைவி இரண்டு சிறுநீரகங்களையும் இழந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறாள் . வயதான காலத்தில் பிள்ளைங்க தான் பெற்றவர்களுக்கு ஆறுதல்னு சொல்வாங்க . ஆனால் நான் பெற்ற இரண்டு பிள்ளைகளும் சரி இல்லையே . சாரங்கபாணி நினைத்துக் கொண்டு இருக்கையிலேயே அவருடைய இரண்டாவது மகன் ரோஹித் , மனைவி ஐஸ்வர்யா உடன் தனது தாயாரை பார்க்க வந்தான் . அப்பா அம்மாவுக்கு என்ன ஆச்சு . ஏன் என்கிட்ட சொல்லல . யாரோ ஒரு மூணாவது மனுஷன் சொல்லி தெரியுதுப்பா . டேய் ! வாய மூடுடா . பெத்தவங்கள பத்தி கவலைப் படுறவனா இருந்தா எங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி எங்க நிம்மதிய கெட...