களத்து மேட்டில் நெல் அடித்து குளத்து மேட்டில் துணி துவைத்து கட்டு சோறு கட்டி என்னை கல்வி கற்க அனுப்பினாய் அம்மா .... காடு மேடு சுற்றி வந்து காவல் நீ எனைக் காத்து கழனி சென்று விறகு வெட்டி கால் வயிறு காஞ்சி ஊற்றினாய் அம்மா ..... கட்டியவன் காப்பாற்ற வழியற்று கைவிட்டான் உன்னை கந்து வட்டி கடன் வாங்கி கலெக்டர் எனை ஆக்கினாய் அம்மா ... காடு சுற்றி களைத்தவளை முதுகு தேய உழைத்தவளை ஊர் போற்ற வாழ வைக்க பிள்ளை நான் எண்ணினேன் அம்மா ... கடைசி ஒரு ஆசை என்று கல்யாணம் பண்ணி வைத்தாய் கட்டிய தாலி மஞ்சள் காயுமுன்னே கட்டியவள் தள்ளி வைக்க சொன்னால் உன்னை ... மனையறம் தான் ...